இந்திய அரசியலமைப்பு


இந்திய அரசியலமைப்பு (இந்தி; भारतीय़ संविधान, Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். எழுதப்பட்ட சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சி மற்றும் ஒருமுகத்தன்மை கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது இந்திய அரசியலமைப்பாகும்.அது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள்,மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 450 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட,குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியாபொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி(federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘கூட்டாட்சி’ (கூட்டரசு – federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக ‘ஒன்றியம்’ (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், ” இறையான்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு” என்றும் ” இந்திய யூனியன்” என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் ஒரு முழுப் புரிதலையும் தரும் படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ‘அடிப்படை உரிமைகளும்’ அடங்கும்.

 

இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு

இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழுமார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பனியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.

 

அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு

1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee)உருவாக்கப்பட்டது.

1. பீ. இரா. அம்பேத்கர்

2. கோபால்சாமி ஐயங்கார்

3. அல்லாடி கிருஷ்ணமூர்த்தி

4. கே.எம். முன்ஷி

5. சையது முகமது சாதுல்லா

6. மாதவராவ்

7. டி. பி. கைதான்

ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948,பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949, ஜனவர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத்தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானர் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. “இந்திய அரசியலமைச் சட்டம்-1950” இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.

இது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளை கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

 

இந்திய அரசியலமைப்பின் கூறுகள்

இந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும்(Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (article)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.

 

அடிப்படை உரிமைகள்

இந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்லது. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில் இந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:

1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14)

2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15)

3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16)

4. தீண்டாமை ஒழிப்பு(பிரிவு-17)

5. பட்டங்கள் ஒழிப்பு(பிரிவு-18)

6. ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22)

7. சமய உரிமை(பிரிவு 25-28)

8. கல்வி உரிமை(பிரிவு 29)

9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)

ஆகியன முக்கியமனவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.

 

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

இந்தியாவிலுள்ல மத்திய மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டஙக்ள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்(Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோரும் போதுமான வழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.

இக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளேஇவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.

 

மத்திய நிர்வாகக் குழு

குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், மத்திய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக மத்திய நிர்வாகக் குழு அமையும்.

 

குடியரசுத் தலைவர் (President of India)

இந்தியக் குடியரசுத் தலைவர்என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட “இந்திய அரசின் தலைவர்” ஆவார். மத்திய நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். ‘இந்தியாவின் முதல் குடிமகன்’ என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.

குடியரசுத் துணைத் தலைவர்

மத்திய அமைச்சரவை

பாராளுமன்றம்

மாநிலங்களவை

மக்களவை

 

மாநில அரசுகள்

1935 முன்பானபிரித்தானியநாடாளுமன்றத்தின்சட்டங்கள்

அச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிருவாகச் சபை மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையியை இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது.இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது மற்றும் சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது. இந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.

 

இந்தியஅரசுச்சட்டம் 1935

இந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை ,எனினும் இந்திய அரசியலமைப்பில் ஒரு பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன. கூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.

கேபினெட்டுமிஷன்திட்டம்

1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும்,காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை மேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.

இந்தியசுதந்திரசட்டம் 1947

சூலை 18, 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான – இந்தியாமற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து அவர்கள் தங்களின் ஒரு புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதபடும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு சபை இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. சட்டம் மேலும் மற்ற மன்னர் ஆளும் மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது.இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலலச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களளட்சிக் குடியரசாக மாறியது. 26நவம்பர், 1949 தேசிய சட்டம் தினம் என்று அறியப்படுகின்றது.

 

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

மத்திய மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. .ஜவகர்லால் நேரு, சி ராஜகோபாலாச்சாரி, ராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சன்திப் குமார் படேல், டாக்டர் அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் சில முக்கிய பிரமுகர்களாக இருந்தன. தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தர். மற்றும் பார்சிஇனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிநிதித்துவம் கொன்டிருந்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக,ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர Cஊமர் Mஊகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். ஆல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங்க் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி,கனேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு, ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக், ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு சபையின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு சபை உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.

 

வரைவு

சட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் ஒரு திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், யூனியன் நாடுகள் குழு மற்றும் மத்திய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு,தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு மற்றும் ஆறு உறுப்பினர்கள் இணைந்து நியமிக்கப்பட்டது. ஒரு வரைவு அரசியலமைப்பு தயாரிக்க பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உறுவாக்கியவர்கள் , பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும் , மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகளை அமரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன . அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, ஒரு உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு,பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு இந்திய அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் சட்டம் ஆனது.

அரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.

அமைப்பு

அரசியல், அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளை கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொன்டது எண்றாலும் ஒரு வலுவான ஒற்றை சார்பு கொண்டிருக்கிறது.

 

அரசாங்கத்தின்அமைப்பு

பின்வருமாறு மத்திய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிரது

“ஒரு ஜனநாயக நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ….. அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது. ”

 

 

கூட்டாட்சிஅமைப்பு

அரசியலமைப்பு மத்தியில் மற்றும் மாநிலங்கள் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் சக்திகளை மூன்று பட்டியல்,அதாவது மத்திய பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியலில் என பிரிக்கிறது.தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விஷயங்கள் யூனியன் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன.பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலம் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்குவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் யூனியன் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான ராஜ்ய சபா,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

 

பாராளுமன்றஜனநாயகம்

இந்திய ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டார், மற்றும் நேரடியாக மக்களால் கிடையாது.ஜனாதிபதி மாநில தலைவர் உள்ளார் மற்றும் பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும்.

இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.

சுதந்திரமானநீதித்துறை

இந்திய நீதித்துறை நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது, மற்றும் இரு மாநிலங்கள், அல்லது ஒரு மாநிலம் மற்றும் யூனியன் இடையே பிரச்சினைகளிள் ஒரு நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டு உள்ளது, மற்றும் அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பிலல்லாததாக அறிவிக்க முடியும்.

 

அரசியலமைப்பை மாற்ற

 

அரசியல் சட்ட திருத்தங்கள் கட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி , பாராளுமன்றம் மாற்றம் செய்யல்லாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும்.மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை,பாராளுமன்றம் முன் செலுத்ப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டம் ஆக நிறைவேறி உள்ளது.எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்ட உள்ளது.

 

சட்டங்களின் நீதிமுறை மேலாய்வு

நீதிமுறை மேலாய்வு அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது.நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,

1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.

 

பகுதிகள்

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (உட்பிரிவு 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.

பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 உட்பிரிவு 244) பழங்குடியினர் பகுதிகள் குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 13( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்

பகுதி 14 (உட்பிரிவு 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

 அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடிய

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியது சென்னை ஐகோர்ட்: சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெருமிதம்

கருத்துகள்

 On Eating Out

 

சென்னை: சமூக அமைதியை கெடுத்துவரும் சைபர் குற்றங்களை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் வலியுறுத்தியுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளாகவும், மூத்த வக்கீல்களாகவும் உள்ளவர்களின் அமைப்பான செலக்ட் 75 சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 150வது விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், இப்ராஹிம் கலிபுல்லா, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.முருகேசன், நீதிபதிகள் ஜோதிமணி, சித்ரா வெங்கட்ராம், நாகமுத்து, மூத்த வக்கீல்கள் கே.பராசரன், கே.கே.வேணுகோபால், நாகேஷ்வரராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி சதாசிவம் பேசியதாவது: சென்னை உயர் நீதிமன்றம் இந்திய நீதிமன்றங்களில் மிகவும் சிறப்பான அந்தஸ்தை பெற்றுள்ளது. லண்டன் நீதிமன்றங்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகவும் அதிக கட்டிடங்களை கொண்ட நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது.

உயர் நீதிமன்ற வளாகத்திலேயே மாவட்ட நீதிமன்றங்கள் உள்ள ஒரே உயர் நீதிமன்றம் இதுதான். இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான வழக்கு களை விசாரித்து தீர்ப்பளித்து நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள நீதிமன்றமும் சென்னை உயர் நீதிமன்றம்தான். மாலை நேர நீதிமன்றங்களை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி அதன்மூலம் ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. 2005ல் சமரச தீர்வு மையம் நாட்டிலேயே முதன்முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் உருவாக்கப்பட்டது. இங்குள்ள சம ரச தீர்வாளர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள சமரச மையங்களுக்கு சென்று வழக்குகளை தீர்ப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளனர்.

முக்கிய தீர்ப்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரக்கூடிய வகையிலான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத் தில் நடத்தப்பட்டுள்ளன. சம்பாக்கம் துரை ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப் பின் அடிப்படையில்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் இடஒதுக்கீடு முறையே கொண்டு வரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் தொடரப்பட்ட அப்பீல் தள்ளுபடி செய்யப்பட் டது.  அதன்பிறகே அரசியலமைப்பில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.

50% இடஒதுக்கீடு
இதேபோல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில்தான் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு முறை 50 சதவீதமாக்கப்பட்டது. இந்திய அரசியமைப்பு சட்டத்தில் 76வது பிரிவில் திருத்தம் செய்ய இந்த தீர்ப்பே காரணமாக அமைந்தது.

குவாரி உரிமம்
குவாரிகள் உரிமம் தொடர்பான விதிமுறை யில் உரிமத்தின் காலம் 10 ஆண்டுகள் என்று வரையறுத்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில்தான். குழந்தை தொழிலாளர் மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டுவருவதற்கான உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம்தான் பிறப்பித்தது. நாட்டு மக்களுக்கு அரசுகளின் செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிவிப்பதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசு பணிகள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம். இந்த சட்டத்தின்கீழ் தகவல் பெற்று தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அசாம் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு பொது வினியோக திட்டத்தின்கீழ் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்ததையும் மறந்துவிடக்கூடாது.  தகவல் தொழில்நுட்ப புரட்சியின் காரணமாக இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதே நேரத்தில் சைபர் குற்றங்களும் அதிகரித்துவிட்டன.  உலகின் பயங்கரவாத அமைப்புகள் இன்டர்நெட் போன்ற தகவல் தொழில்நுட்பங்களைத்தான் முக்கிய ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இதுபோன்ற குற்றங்களை தடுத்து தனிமனித உரிமையையும் தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்த நீதித்துறை முன்வர வேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் இந்த பணிகளை செய்யும் என்று நம்புகிறேன். இவ்வாறு சதாசிவம் பேசினார்.

 Thanks n Regards

Jeevanandam K

தமிழக அரசியல் கட்சிகள்


 

தமிழக அரசியல் கட்சிகள்

தேசிய முற்போக்கு திராவிட கழகம் !

தேசிய முற்போக்கு திராவிட கழகம் !

January 3, 2013 | 0 Comment

  தேசிய முற்போக்கு திராவிட கழகம், எண் -125, ஜவஹர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை – 600 107. போன் – 044 – 24756175, 044 – 24750870.

பாரதிய ஜனதா கட்சி !

பாரதிய ஜனதா கட்சி !

January 3, 2013 | 0 Comment

  பாரதிய ஜனதா கட்சி , மாநில தலைமை அலுவலகம் , கமலாலயம் , எண் – 19, வைத்தியராமன் தெரு, தி.நகர் சென்னை -600 017 போன் – 044 – 24327373, 24359600 பேக்ஸ் – 044 –… மேலும்… »

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் !

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் !

January 3, 2013 | 0 Comment

    அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தலைமைக் கழகம், எண் – 275, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 600 0014. E -Mail: aiadmk@hotmail.com poesgardens@hotmail.com  

திராவிட முன்னேற்றக் கழகம் !

திராவிட முன்னேற்றக் கழகம் !

January 3, 2013 | 0 Comment

  திராவிட முன்னேற்றக் கழகம், எண் – 367 – 369 , அண்ணா அறிவாலயம் தேனாம்பேட்டை, சென்னை – 600 0018.

மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம் !

மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம் !

January 3, 2013 | 0 Comment

  மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், தாயகம், எண் – 12 (141), ருக்குமணி இலட்சுமதி சாலை, எழும்பூர், சென்னை – 600 008. ———————————————————– திரு. வைகோ இல்லம் திரு. வைகோ பொதுச் செயலாளர் மறுமலர்ச்சி தி.மு.க. ஏ.எல். 20, 4… மேலும்… »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) !

January 3, 2013 | 0 Comment

      இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ் மாநிலக் குழு, பி.ராமமூர்த்தி நினைவகம், புதிய எண் – 27, வைத்தியராம் தெரு, தி.நகர், சென்னை – 600 017. Phone No. – 044 – 24341205, 24326800,24326900…

தமிழக அரசியல் கட்சிகள் Subscribe to தமிழக அரசியல் கட்சிகள்

புதிய தமிழகம் கட்சி !

புதிய தமிழகம் கட்சி !

January 3, 2013 | 0 Comment

  புதிய தமிழகம் கட்சி , தலைமையகம், எண் – 1/2 யு இ கங்காதரன் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. தொலைபேசி : 044 – 28250304 தொலை நகல் : 044 – 28250304 மின்னஞ்சல்… மேலும்… »

நாம் தமிழர் கட்சி !

நாம் தமிழர் கட்சி !

January 3, 2013 | 0 Comment

  நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர் தலைமையகம், கதவு எண்.8.மருத்துவமனை சாலை, செந்தில் நகர், போரூர், சென்னை – 600 116. மின்னஞ்சல்: naamtamizhar@gmail.com போன் – 044 – 24769070, 044 -24769080. சர்வதேச தொடர்புக்கு : +1… மேலும்… »

ஜனதா கட்சி !

ஜனதா கட்சி !

January 3, 2013 | 0 Comment

ஜனதா கட்சி , எண் -3, பாபநாசம் சிவன சாலை, மைலாப்பூர் , சென்னை – 600 004. Phone No. : 044 – 2498 3338 Fax : 044 – 2498 2886

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி !

இந்திய ஜனநாயக மக்கள் கட்சி !

January 3, 2013 | 0 Comment

இந்திய ஜனநாயக கட்சி, எண் – #9,3 வது அவென்யூ 34 வது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. PH: 044 – 42319091 / 24719091 Fax:044-42319092 E-mail:vendharijk@gmail.com

கொங்கு நாடு மக்கள் கட்சி !

கொங்கு நாடு மக்கள் கட்சி !

  கொங்கு நாடு மக்கள் கட்சி, தலைமை அலுவலகம் , எண் – 46, சம்பத் நகர், ஈரோடு – 638 011. போன் : 93622 65446, செல் – 97887 30000.

கோலங்கள் (Kolangal)


கோலங்கள் (Kolangal)

 

Thanks n Regards

Jeevanandam K

சமையல் செய்முறை – கறிவேப்பிலை சாதம்


சமையல் செய்முறை – கறிவேப்பிலை சாதம்

 

 

உடலுக்கு உறுதியளிக்கும் கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள் :

சாதம் – 2 கோப்பை
கறிவேப்பிலை – ஒரு கோப்பை
நல்லெண்ணை – 1 மேஜைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
வர மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
முந்திரி – 5
எலுமிச்சை – 1/4 பழம்
நெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

1. சிறிதளவு நெய்யில் கறிவேப்பிலையை மொறுவலாக வறுத்து, மைய பொடித்துக் கொள்ளவும்.

2. பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

3. அரிசியை சாதமாக வடித்து உதிரி உதிரியாக ஒரு அகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.

4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு
வெடித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு சிவந்ததும், வர
மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.

5. பிறகு நறுக்கிய வெங்காயம் பெருங்காயத்தூள் சேர்த்து சிவக்க வதக்கவும்.

6. பிறகு பொடித்த கறிவேப்பிலையைப் போட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

7. அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து சேர்க்கவும்.

8. பின்னர் அதனுடன் மிளகுத்தூள், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.

9. பிறகு ஆற வைத்த உதிரியாக உள்ள சாதத்தைச் சேர்த்து சாதம் குழையாமல் நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

குறிப்பு :

1. இதில் சிறிது இஞ்சி துருவலைச் சேர்த்து வதக்கினால் இன்னும் வாசனையாக இருக்கும்.

2. முந்திரிக்குப் பதிலாக, வறுத்த நிலக்கடலை, வறுத்த பொட்டுக்கடலை போன்றவையும் சேர்க்கலாம்.

அழகுக் குறிப்புகள் – கூந்தல் அழகுக் குறிப்புகள்


அழகுக் குறிப்புகள் – கூந்தல் அழகுக் குறிப்புகள்

கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:

கூந்தல் பளபளக்க

1. கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர் ஆயில்கள் இன்று இருக்கின்றன. இந்த ஹேர் ஆயில்களெல்லாம் தலைமுடியின் ஆயுளைக் குறைத்து விடுகின்றன. சுத்தமான நல்லெண்ணெயையும் சுத்தமான தேங்காயெண்ணையும் தவிர வேறு எதையும் தலையில் படவிடக் கூடாது.

2. சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில் தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும்.

3 . தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில்
விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு மற்றும் சீயக்காய் வைத்து அலசி விடவும்.
அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.

இளநரை நீங்க

1. நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.

2. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

3. சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும்.

பொடுகு நீங்க

1. வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

2. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

நரைமுடி கருப்பாக

1. சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை முன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்

தலை முடி செழித்து வளர

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

பேன் தொல்லை நீங்க

1. வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

2. துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை கழுவினால் பேனெல்லாம் செத்து விழுந்து விடும் முடியும் நன்றாக வளரும்

கூந்தல் உதிர்வு

1. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும்

2. அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

முடிகளை நீக்க

1. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

2. முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

செம்பட்டை மறைய

முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால் செம்பட்டை மறையும்.

பிசுபிசுப்பு மறைய

1. ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

Thanks n Regards

Jeevanandam K

சித்த மருத்துவம் – சித்த மருத்துவ குறிப்புகள் 1


சித்த மருத்துவம் – சித்த மருத்துவ குறிப்புகள் 1

பரபரப்பு மிகுந்த அவசர உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். அன்பைப் பரிமாறும் இதயங்கள், அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி அத்துடன் போதுமென்ற மனமும் கொண்டிருந்தாலே பெருமளவு நோய்கள் நம்மை அண்டாது பாதுகாக்க இயலும். அப்படியும் அவ்வப்போது ஏற்படும் சிறு உடல்நலக்குறைவுகளுக்கான தீர்வு வீட்டில் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே கிடைக்கிறது.

தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.

தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்

சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு

கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வந்தால் உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.

குடல்புண்

மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.

வாயுத் தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.

வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்

செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு

சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குணமாகும்.

தேமல்

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.

மூலம்

கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.

தீப்புண்

வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வந்தால் தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்டு இருமல்

எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்.

தமிழக மாவட்டங்கள் – மதுரை (Madurai)


தலைநகரம் : மதுரை
பரப்பு : 7,057 ச.கி.மீ
மக்கள் தொகை : 2,562,279
எழுத்தறிவு : 1,795,751 (78.65 %)
ஆண்கள் : 1,295,124
பெண்கள் : 1,267,155
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ – க்கு 733

வரலாறு :

தமிழர் நாகரீகம், தமிழ்மொழி, தமிழ்ப்பண்பு இவற்றின் தாயகமாய் விளங்கி வருவது மதுரை மாவட்டம். குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் மூவகை நிலப்பண்புகளை இம்மாவட்டம் கொண்டுள்ளது. இம்மாவட்டம் பல மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. பலநூறு ஆண்டுகள் பாண்டியர்களின் ஆளுகையின் கீழ் மதுரை மாவட்டம் இருந்தது. இம்மாவட்டம் புராண, வரலாற்றுச் சிறப்புடையது. கி.பி. 77இல் பிளினி என்பவரும், கி.பி. 140 இல் தாலமி என்பவரும் மதுரையின் பழம்பெருமையைத் தத்தமது நூல்களில் குறித்துள்ளனர்.

மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த அசோகனின் கற்றுண்களில் பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் பாண்டியர்தம் பழம்பெருமை விளக்கப்ட்டுள்ளது. மெகஸ்தனிஸ் எனும் கிரேக்க நாட்டுத் தூதர் தமது ‘இண்டிகா’ நூலில் பாண்டியநாடு தென்கடற்கரை வரை பரவியிருந்தது என்று கூறியுள்ளார். கெளடில்யர் தம் அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் பாண்டிய நாட்டின் சிறப்புகளை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வரலாற்றுக் காவியமாக விளங்கும் மகாவம்சம் என்னும் நூலும் பாண்டியர்தம் பெருமையைப் பலவாறாகப் பெருமைப்படுத்திக் கூறுகிறது. மதுரையில்தான் தமிழ்மறையான திருக்குறளும் அரங்கேற்றம் செய்யப் பட்டுள்ளது. தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையில் தமிழ்ப்புலவர்கள் கூடி தமிழாராய்ந்த காரணத்தால் மதுரைக்குக் கூடல் என்னும் பெயரும் அமைந்தது.

பாண்டியர்கள் கடல் வாணிகத்தில் மிகுந்த சிறப்புற்றிருந்தனர். காயல் துறைமுகத்தை வணிகத் தலைநகராய் கொண்டிருந்தனர். இவர்கள் ஆட்சிகாலத்தில் கோயில், கலை, தொழில், தமிழ்மொழி அனைத்தும் ஏற்றம் பெற்றன. பாண்டியர்தம் நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முந்தையது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா கல்வெட்டுகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். சங்க இலக்கியங்களின் வாயிலாகவே பாண்டியர் பலரைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இச்சங்கக் காலத்தை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்றாகப் பிரித்துக் கூறுவர்.

முதற்சங்கம் : இது அகத்தியர் முதலானோரால் நடத்தப்பட்டது. பல்லாண்டுகள் நடைபெற்ற இச்சங்கக் காலத்தில் அகத்தியம், பரிபாடல் முதலிய நூல்கள் அரங்கேற்றப்பட்டன.

இடைச்சங்கம் : இது 59 மன்னர்களின் ஆதரவைப் பெற்று (வெண் தேர்ச் செழியன் முதல் முடத்திருமாறன் வரை) விளங்கியது.

கடைச்சங்கம் : முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதியின் காலம் வரை கடைச்சங்கம் சிறப்புற்றது. பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகர பாண்டியன் காலத்தில் இன்றுள்ள மதுரை மாநகரின் அடிப்படை அமைப்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1786 இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில்தான் இத்தாலியிலிருந்து மார்கோபோலோ பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தான். இவன் காலத்துடன் பாண்டியப் பேரரசு மறைந்தது. அதன் பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் மதுரைச் சீமை இஸ்லாமியர் ஆட்சியில் சிக்கிக் கிடந்தது.

ஹரிகரர், புத்தர் என்போர் தென்னிந்தியாவில் முஸ்லீம் ஆட்சி பரவுவதைத் தடுத்து, மதுரையில் முகமதியராட்சியை ஒழித்து, அங்கு விஜய நகர பேரரசை அமைத்தனர். மதுரை இஸ்லாமியர் ஆட்சியிலிருந்து மீட்கப்பட்டதுடன், மூடிக்கிடந்த மீனாட்சியம்மன் கோயிலும் திறக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் மதுரையில் நாகம நாயக்கரைப் பிரதிநிதியாய் நியமித்து ஆட்சி செய்தார். தமிழ்நாட்டில் நாயக்கர் ஆட்சி சுமார் 200 ஆண்டுகள் நீடித்திருந்தது. இவர்கள் காலத்தில் தான் மதுரை, ஸ்ரீரங்கம் கோயில்கள் கட்டப்பட்டன.

மதுரைக்குப் பெருமை சேர்த்த நாயக்க மன்னர்களுள் திருமலை நாயக்கர் தலைசிறந்தவராவார். அவர் திருமலைநாயக்கர் மகால் ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றைக் கட்டியதோடு அழகர்கோயில், திருபரங்குன்றம் கோயில் ஆகியவற்றிற்குத் திருப்பணி செய்தார். நாயக்கர் மரபில் வந்த பேரரசி ராணி மங்கம்மாள் தமுக்கம் என்ற பெயரில் ஒரு மாளிகையைக் கட்டினாள். 1786இல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. மதுரைச் சீமை சென்னை மகாணத்தில் ஆங்கிலேய கவர்னர் ஆட்சிக்கு 1801-இல் கொண்டுவரப்பட்டது. இந்திய விடுதலைப் போரின் பின்னணியில் மதுரை சிறப்பிடத்தை வகித்தது. 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும், மதுரை மாவட்டம் தமிழ்நாட்டில் சிறப்பான ஒரு மாவட்டமாகத் திகழ்ந்து வருகிறது.

எல்லைகள் :

மதுரை மாவட்டத்திற்கு வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டமும், தெற்கில் விருதுநகர் மாவட்டமும், மேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக உள்ளன. இம்மாவட்டத்தின் தலைநகர் மதுரை ஆகும்.

வழிப்பாட்டுத் தலங்கள் :

மீனாட்சியம்மன் – சுந்தரரேஸ்வரர் கோவில், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், மதுரை மாரியம்மன் கோவில் முதலியன மதுரை மாவட்டத்தில் முக்கிய வழிப்பாட்டுத் தலங்களாகும்.

மீனாட்சி அம்மன் கோவில் :

Meenakshi Templeகி.பி. 1560-இல் விசுவநாத நாயக்கரால் இக்கோவிலைக் கட்டும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது. இதனை முடிக்க சுமார் 120 ஆண்டுகள் ஆயிற்று. இங்கு அம்மனை வழிபட்ட பிறகே இறைவனை (சொக்க நாதர்) வழிபடுவது மரபாக உள்ளது. கோவில் விமானத்தை எட்டு யானைகளும், முப்பத்திரெண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு கணங்களும் தாங்குவது போன்று புராண கதையில் கூறியபடி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

கீழ்க் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்திற்குக் கோடு கிழித்தாற் போன்று சரியாகச் சிவலிங்கப் பெருமான் வழியாகப்போகிறது. வடக்கு தெற்குக் கோபுரங்களும் சுந்தரேசர் திருக்கோயிலை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். தமிழ்நாட்டுச் சிற்பிகளின் திறனுக்கோர் எடுத்துக்காட்டாய் இதைக் கொள்ளலாம். முக்குறுணி விநாயகர் உருவம் மாபெரும் வடிவில் அமைந்துள்ளது. மீனாட்சி அம்மன் சந்நிதிக்குள் நுழையும் வாயிற்கதவுகள், முக்குறுணி பிள்ளையாருக்கு அருகேயுள்ள கதவுகள், தெற்குக் கோபுரத்திற்குக் கீழேயுள்ள கற்தூண்கள் ஆகியவற்றில் கண்கவர் நடனக் கலைச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

புராணக்கதைகளை விளக்கும் பல கதைச் சிற்பங்கள் கிழக்கு மேற்குக் கோபுரங்களில் காணப்படுகின்றன. மண்டபத்தூண் ஒன்றில் யானைத் தலை, பெண் உடல், புலிக்கால் ஆகியவற்றைக் கொண்டச் சிற்பம் காணத்தக்கது. திருமணமண்டபம். கம்பத்தடி மண்டபம் ஆகியவை கலையழகுடன் அமைந்துள்ளன.

கோயிலின் பல பகுதிகளிலும் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பேணி வைக்கப் பட்டுள்ள பழங்காலத்து நாணயங்களையும் பார்வையிடலாம். சங்க காலத்துப் புலவர் களின் திருவுருவங்கள் உள்ளன. திருக்குறள், தேவாரம், திருவாசகம் முதலியன பொறிக் கப்பட்டிருப்பதையும் காணலாம். தலவிருட்சமாக விளங்கும் கடம்ப மரத்தின் எஞ்சிய பகுதி வெள்ளித் தகடால் போர்த்தப்பட்டுள்ளது. கோவில் வழிபாட்டிற்குப் பயன்படும் மலர்ச்செடிகள், குளத்திற்குள் வைக்கப்பட்டிற்கும் பொற்றாமரை முதலியன பார்க்கத் தக்கவை. காலங்காலமாகக் கட்டிடக் கலையில் ஏற்பட்ட மாறுதல்களை இந்தக் கோவிலிலே கண்டறியலாம்.

அவ்வவ் காலத்து ஆடைகளையும் அணிகலன்களையும் பழக்க வழக்கங்களையும் கூட இக்கோயில்தூண் சிற்பங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. பக்தர்களுக்கும், புராண ஈடுபாடு உடையவர்களுக்கும், திருவிளையாடற் புராண கதைகளை அறிய விழைபர்களுக்கும் இக்கோயில் ஒப்பற்ற கருவூலமாகத் திகழ்கிறது. மொட்டைக் கோபுரத்தின் அடியில் உள்ள தூண்கள் இசை எழுப்புகின்றன. பலவகை உயிரினங்கள் கல்லில் செதுக்கப் பட்டுள்ள திறனையும், இவற்றை வாகனங்களாக உருவாக்கியுள்ளதையும் கண்டு மகிழலாம்.

மீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதியில் அஸ்த சக்தி மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் மதுரை இளவரசி மீனாட்சியின் கதையையும், சிவனின் அவதாரமாகிய சுந்தரேஸ்வரருடையத் திருமணத்தைப் பற்றியும் சொல்லும் விதத்தில் அமைந்துள்ளன. பொற்றாமரை குளம் இருக்கும் இடத்தில் தான் பழைய தமிழ் இலக்கிய கழகமான சங்கத்தின் இலக்கியச் சந்திப்பும், பரிசளிப்பும் நடந்தேறியது. இக்குளத்தில் மூழ்கிய பிரதிகள் தவிர்க்கப்பட்டன. மிதந்த பிரதிகள் மாபெரும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இக்குளத்தின் மேற்கு கோடியில் ஊஞ்சல் மண்டபம் உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையன்றும் இங்கு மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் ஊஞ்சலாடும் வைபவம் நடை பெறுகிறது. இம்மண்டபத்திற்கு அடுத்து கிளிக் கூட்டு மண்டபம் அமைந்துள்ளது. இங்கு மீனாட்சியின் பெயரை உச்சரிக்கும் கிளிகள் உள்ளிட்ட பல சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப் பட்டுள்ளன. இம்மண்டபத்தின் பின்புறம் மீனாட்சி உள்ள கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

வசந்த மண்டபம் அல்லது புதுமண்ட பத்தில் மீனாட்சி திருமண நிகழ்ச்சிகள் பல காணப் படுகின்றன. மற்றும் இராவணன் கயிலாய மலையைத் தூக்கியது, சூரிய சந்திரர் யானைக்குக் கரும்பு வழங்கியது முதலிய சிற்பங்களும் காணத்தக்கவையாகும். இந்த மண்டபம் திருமலை நாயக்கரால் கட்டப்பெற்றது. ஏப்ரல்-மே மாதங்களில் வரும் வசந்த விழா இம்மண்டபத்தில்தான் கொண்டாடப்டுகிறது. மீனாட்சிக் கோயிலுக்கு கிழக்கே 5கி.மீ. தொலைவில் உள்ள குளம் மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது.

இக்குளத்தின் நடுவில் விநாயகர் கோவில் இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோவில் கொண்ட பரப்பின் அளவுக்கு தெப்பக்குளமும் அமைந்துள்ளது. ஜனவரி-பிப்ரவரியில் இங்கு தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா நடைபெறும்போது இந்தியா முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகிறார்கள். இந்தக் குளம் 1646-இல் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது. வைகை ஆற்றிலிருந்து புதை குழாய்கள் மூலம் இக்குளத்திற்கு நீர் வரும் விதத்தில் இக்குளம் கட்டப்பட்டுள்ளத.

மீனாட்சி அம்மனுக்குச் சூட்டப் பெறும் வைரக் கிரீடம் 470 காரட் எடையுள்ளது. தங்கக் கவசம் ஆறு கிலோ கிராம் தங்கத்தால் ஆனது. முத்து விதானம். நீலமேகப் பதக்கம், தங்க அங்காடி, முத்து, நவரத்தினக் கிரீடங்கள், நற்பவளக் கொடி, விலை யுயர்ந்த காசுமாலைகள் முதலிய நகைகளும் உள்ளன. நளமகாராஜா, பாண்டிய, நாயக்க மன்னர்கள், மற்றும் கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்து நகைகளும் மதுரை மீனாட்சியம்மனுக்குச் சொந்தமானவை. இவற்றைப் பார்க்க விரும்புவோர் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி பார்வையிடலாம்.

ஆயிரங்கால் மண்டபத்தில் உண்மையில் 985 தூண்களே உள்ளன. இம்மண்டபத்தில் கோயில் அருங்காட்சியகம் உள்ளது. இக்கோயில் 6 ஹெக்டேர் பரப்பில் கட்டப் பட்டுள்ளது. பெரியத் திருவிழாக்கள் சித்திரையிலும் மாசியிலும் நிகழ்சின்றன.

சித்திரை சித்திரைத் திருவிழா (மீனாட்சி திருமணம்)
வைகாசி வசந்த விழா (விசாக விழா)
ஆனி ஊஞ்சல் விழா
ஆடி முளைக் கொட்டு விழா
ஆவணி பிட்டுத் திருவிழா
புரட்டாசி நவராத்திரி விழா
கார்த்திகை தீபவிழா
மார்கழி திருவாதிரை
தை தைப்பூச நாளில் தெப்பத்திருவிழா

மாசி – தை மாத மக நட்சத்திரத்தில் தொடங்கும் நாற்பது நாள்விழா
பங்குனி – பங்குனி உத்தரவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூடும் சுற்றுலாத் தலமும் ஆகும்.

மீனாட்சி – சுந்தரேசுவரர் கோவில் :Meenakshi Sundaresvarar Temple

மதுரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கோச்சடை என்னும் ஊரில் இக்கோவில் எழுந்துள்ளது. கருவறையில் லிங்கம் உள்ளது. கருவறையின் தெற்கே உள்ள அறையில் மீனாட்சி அம்மன் காணப்படுகிறது. முக மண்டபத்தில் மூன்று இடம்புரி விநாயகர் உருவங்களும், சுப்ரமணியர், நந்தி ஆகிய உருவங்களும் உள்ளன. இவ்வுருவங்களில் நந்தியே மிகப் பழமையானது. இதன் காலம் பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் நூற்றாண்டு என்பர். இச்சிலை சுமார் 1900 ஆம் ஆண்டில் வைகைக்குத் தென் கரையில் ஒரு மேட்டில் கண்டெடுக்கப்பட்டது. இந்த நந்தி உருவம் கால்களை மடக்கி, முகத்தை இடப்பக்கம் திருப்பி, செங்கொம்புகளுடனும் கொம்புகளை ஒட்டிய இலை போன்ற காதுகளுடனும் வடிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. நந்தியின் கொண்டை சரிந்த நிலையில் தெரிகிறது. கழுத்தில் இரட்டைக் கயிறும், சங்கிலி கோத்த சலங்கையும், ஒற்றை மணியும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. கால்களிலுள்ள குளம்பும், வாலும் கூட சிறப்பாக அமைந்துள்ளன.

கம்பத்தடி மண்டபத்தில் நடராசர் வழக்கத்திற்கு மாறாக இடக் காலை ஊன்றி வலக் காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் காட்சி தருகிறார். இம்மண்டபத்தூண்களில் மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் நடைபெறும் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் ஒரு சுற்றுலாத் தலமாகும்.

திருபரங்குன்றம் :

Thiruparankunramஇது அறு படை வீடுகளுள் முருகனுக்கு உகந்த படைவீடு. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் போற்றியிருக்கும் தலம். இது மதுரைக்குத் தென் மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. இரயில் நிலையம் உள்ளது. முருகன் இந்திரனின் மகளாகிய தெய்வானையை மணம் செய்து கொண்ட பதியாகும். சங்கநூல்கள் பலவற்றில் குறிக்கப் பெற்ற தொன்மைச் சிறப்புடையது. முருகன் மணவிழாக் கோலத்தில் இக்கோவிலில் காட்சி தருகிறார். விநாயகர் கனியும் கரும்பும் கரங்களில் ஏந்தி மணவிருந்தினைச் சுவைத்து நிற்கும் கோலத்தில் காணப்படுகிறார். இக்கோயிலில் முருகன் உருவத்திற்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகன் கைவேலுக்கே அபிஷேகப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

திருபரங்குன்றம் எனும் சொல் சிவபெருமானுக்கு உரிய மலை என்றும் பொருள் தரும். தேவாரப் பெருமைப் பெற்ற தலம். முருகனே இங்கு வந்து சிவப்பெருமானை வழிப்பட்டு பயனெய்தினார் எனவும், திருமால் முதலிய எல்லாத் தேவர்களும் முருகனைக் காண இங்கு வந்தனர் எனவும் புராணம் கூறுகிறது. இங்குள்ள சரவணப் பொய்கையும், பிரமகூவமும் புனிதத் தீர்த்தங்களாகப் போற்றப்படுகின்றன. 150 அடி உயரமுள்ள எழுநிலை மாடக் கோபுரத்துடன் தோன்றும் இக்கோயில் வயல்களும் பொழில்களும் சூழ்ந்த மலையைக் குடைந்து அமைக்கப் பட்டதாகும். இக்கோவிலில் தெய்வானை திருமணக் காட்சி, சுதை வேலைப்பாடுகள் கொண்ட தலப்புராணக் காட்சிகள், கோ பூசை செய்யும் உமையம்மை, பாற்கடலில் பள்ளிக் கொண்ட பெருமாள், இசையொலி எழுப்பும் பூதகணங்கள், மற்றும் இராணி மங்கம்மாள், மீனாட்சி, நாயக்கர் உருவங்கள், துளசி அறையிலுள்ள சிற்பங்கள் அனைத்தும் கலையழகு மிளிர சிறப்பாக அமைந்துள்ளன.

திருப்பரங்குன்றம், சம்பந்தர் சுந்தரர் தேவாரங்களையும், அருணகிரியார் திருப்புகழையும் பெற்றத் தலம். அகநானுறு, பரிபாடல், கல்லாடம் ஆகிய நூல்களில் சிறப்பிடம் பெற்றது. நக்கீரர் பூசை செய்த தலமாதலால், அர்த்த மண்டபத்தில் அவரது திருவுரு காணப்படுகின்றது. பங்குனி உத்திர விழாவில் நக்கீரர் உலாவரும் நிகழ்ச்சி ஐந்தாம் நாளில் நடைபெறுகிறது. இக்கோயில் பாண்டிய அரசர்களாலும், நாயக்க மன்னர் களாலும், நகரத்தார்களாலும், அரசினர் ஆதரவாலும், பொது மக்களாலும் திருப்பணி செய்யப் பெற்றுள்ளது. ஆண்டுமுழுவதும் இக்கோயிலுக்குப் பல்லாயிரம் மக்கள் வருகை தருகின்றனர். இது ஒரு சுற்றுலாத் தலமும் ஆகும்.

அழகர் கோவில் :

Azhagarkoilதொன்றுதொட்டு முருகனின் படைவீடாக விளங்கியது. பிற்காலத்தில் வைணவப் பதியாகவும் விளங்கியது. சில நூற்றாண்டுகள் முருகன் திருக்கோயிலை இழந்த நிலை கொண்டது. 1960 முதல் இருவகைச் சிறப்பும் பெற்றுத் திகழ்கிறது. இத்தலம் மதுரை மாநகரிலிருந்து 20கி.மீ. தொலைவில் உள்ளது. கிடாரிப்பட்டி என்னும் ஊராட்சியுள்
அழகர் மலை அடிவாரத்தில் அழகர் கோவில் உள்ளது. இக்கோயில் பல மண்டபங் களையும் சிற்பச் சிறப்புடைய திருவுருவங்களையும் உடையது. மூலவர் பெயர் கள்ளழகர். கல் அழகர் என்னும் பெயரும் இவருக்குண்டு.

மீனாட்சியின் சகோதரனான கள்ளழகர், மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் திருமணத்திற்குச் செல்வதைத் தவிர்த்தார். நேரங்கழித்து திருமணவிழாவிற்குச் சென்றார். இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது கொண்டாடு கிறார்கள். அழகர் கோவிலிலிருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தங்கத்திலான அழகர் திருவுருவத்தை சுமந்துக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் செல்கிறார்கள். மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சி முடிந்த கட்டத்தில் இவ்வூர்வலம் வைகை கரையை அடையும்.

இந்நிகழ்ச்சிக்கு மாறாக, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிற்பங்களில் மீனாட்சியின் திருமண விழாவை விஷ்ணு தவிர்ப்பதாகச் சித்தரிக்கப்ட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அழகர்க்கு மலர்சூட்டி, தேனும் திணைமாவும் படைக்கின்றனர். அர்ச்சனைக்கு அரளிப் பூவே பயன்படுத்தப்படுகிறது. இக்கோவிலில் உள்ள விஷ்வச்சேனர் இரு திருக்கரங்கள் மட்டுமே கொண்டிருக்கிறார். மேலும் இவர்தம் நாச்சியாருடன் காட்சி தருகிறார். கரு வறையில் சோலைமலைக் குமரனின் வெள்ளி வாகனம் இருக்கிறது. சக்கரத்தாழ் வாருக்கும் மூலவருக்கும் வெள்ளிக்கிழமை சஷ்டி நாட்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் அபிஷேகம் செய்கின்றனர். இன்னும் வலம்புரி விநாயகர், வயிரவர், கலியான சுந்தரவல்லி, ஆண்டாள், சாலிக்கிராமம் முதலிய சந்நிதிகளும் உள்ளன.

அழகர் கோயிலில் கருடன் பறக்காது என்பது நம்பிக்கை. அழகர் மலைத் தொடரின் இயற்கைச் சிறப்பினை நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இம்மலைத்தொடரின் உயர்ந்த பகுதியில் சமணத் துறவியார் வாழ்ந்த இடம் பஞ்ச பாண்டவர் படுக்கை என்று வழங்குகிறது. புத்த, சைவ, வைணவப் பெருமக்கள் இம் மலையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இம்மலை மீது பல சுனைகள் உள்ளன.

அனுமார் தீர்த்தமும் நுபுரகங்கைத் தீர்த்தமும் உள்ளன. மூலவாவி என்னும் குளம் நாக்கீரர் உண்டாக்கியது. இதிலAzhagarkoil் வேனிற்காலத்தில் நீர் மிகுந்தும், மாரிக் காலத்தில் நீர் குறைந்தும் இருக்கும். இவை தவிர, சரவணப் பெய்கை என்னும் தெப்பக்குளமும், சக்கரதீர்த்தமும் உள்ளன. அமாவாசை நாளில் அழகர் கோவிலுக்குத் திரளாக மக்கள் செல்கின்றனர். அழகர் கோவிலில் கள்ளர் ஒருவர் அறங்காவலராக இருப்பது மரபு. தேர்வடம் பிடிப்பவர்களாதலால் இவர்களுக்குப் பரிவட்டம் முதலியன கட்டும் மரபு திருவிழாக்களில் இருந்து வருகிறது. இங்குள்ள பதினெட்டாம்படி கறுப்பனசாமி கள்ளர் சமூகத்தார் வழிபடும் தெய்வங்களுள் தலைமையானது. இதற்கு உருவம் கிடையாது.

கோவில் பிரசாதமாக பெரிய அளவில் செய்யப்படும் நெய்தோசை பனையோலைப் பெட்டியில் வைத்து வழங்கப்படுகிறது. விமானத்துக்குப் பொன்தகடு போர்த்தி இக் கோவில் திருப்பணியைச் செய்தவர்கள் பாண்டிய மன்னர்கள். திருமலைநாயக்கர் கோயிலைச் சுற்றி கோட்டை, பள்ளியறை மண்டபம் முதலியவற்றைக் கட்டினார். இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் தந்தையார் பெயரால் இரணியவர்மன் கோட்டை கட்டப்பட்டதென்பர். பரிபாடல், சிலப்பதிகாரம், திருப்புகழ், அழகர் அந்தாதி ஆகியவையும் இத்தலப் புகழைப் பாடியுள்ளன.

பழமுதிர்ச்சோலை:

Pazhamuthir Solaiஅழகர் கோவிலிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இங்கு பழங்காலத்திலிருந்து முருகன் கோயில் எவ்வாறோ மறைந்து, பிறகு எருத்துமலை எனப்படும் இடமலையில் மீண்டும முருகன் கோயில் கட்டப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் அருள் வழங்கும் வெற்றி வேல் முருகன் உருவம் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. விசாகம், சஷ்டி போன்ற முக்கியச் சிறப்பு வாய்ந்த நாட்களில் மக்கள் ஏராளமாக இங்கு வருகை தருகின்றன. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

செல்லத்தமன் கோவில் :

சிம்மக்கல்லுக்கு தெற்கே உள்ள இக்கோயிலைக் கண்ணகிக் கோவிலாகக் கருது கின்றனர். இக்கோவிலில் ஒற்றைச் சிலம்பை கையிலேந்திய நிலையில் கண்ணகி திருவுருவம் காணப்படுகின்றது.

மாரியம்மன் கோவில் :

வண்டியூரிலுள்ள மாரியம்மன் கோவிலும் கண்ணகி கோவில்தான். கண்ணகி மழைவளம் சுரக்கச் செய்த காரணம் கருதி, கண்ணகியை மாரியம்மன் என்றனர். ஆடிமாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் திருவிழாக்களுக்குப் பெண்கள் பெருங் கூட்டமாக இக்கோயிலுக்கு வருகின்றனர்.

சீனிவாசப் பெருமாள் கோவில் :

கல்லாக்குளத்தில் அமைந்துள்ள இக்கோயில் ஒரு புராதன வைணவக் கோவில். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புகழ் பெற்று விளங்கியது.

மதன கோபாலசாமி கோவில் :

நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்ட இக்கோயில், மதுரையில் தெற்கு, மேற்கு மாசி வீதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இதில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய பதினாறு கால் மண்டபம் இருந்ததாகவும், அதிலிருந்த சிற்பங்கள் தற்போது அமெரிக்காவிலுள்ள பிலடல்பியா அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவில், மேலே குறிப்பிட்ட மண்டபம் ஆகியனப் பற்றி பேரறிஞர் நார்மன் என்பவர் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

உமையாண்டவன் கோவில் :

திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் உள்ள இது குகைக் கோயிலாகும். இங்கு உமை யொருபாகன், பஞ்சமுக கணபதி, ஆறுமுகன், வயிரவர், நடராசர் திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இது பல்லவர் கலையைப் பின்பற்றி பாண்டியர் அமைத்த கோயிலாகும்.

காசி விசுவநாதர் கோவில் :

திருப்பரங்குன்றம் மலையுச்சியில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இக் கோவிலுக்கு அடிவாரத்திலுள்ள முருகன் கோவில் திருக்கைவேல் எடுத்துக் செல்லப்பட்டு விழா எடுக்கப்படுகிறது. இக்கோயிலின் அருகே காசிச் சுனை இருக்கிறது.

அம்மாட்சி அம்மன் கோவில் :

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் கருவறையில் சங்கும் சக்கரமும் ஏந்திய துர்கைச் சிலை உள்ளது.

முத்தையா கோவில் :

நின்ற நிலையில் கையில் அரிவாளும் கதையும் ஏந்தி விளங்கும் இவிவிறைவனை சேரி வாழ்நர் வழிபடுகின்றனர்.

பிட்டு வாணிச்சியம்மன் கோயில் :

இக்கோவிலில் வழிப்படப் பெறும் சப்த கன்னிகைகளுக்கு இவ்வூரார் பிட்டு வாணிச்சி யம்மன் என்று பெயரிட்டுள்ளனர். திருவிளையாடற் புராணத்தில் சிவம்பெருமானுக்குப் பிட்டு அளித்த வாணிச்சி இப்பகுதியில் பிட்டு விற்றதாக வரலாறு. இன்றும் மதுரையில் நடைபெறும் பிட்டுத் திருவிழாவின் போது அமைக்கப்படும் மண்டபத்தின் ஒரு கால், கோச்சடை செட்டியார்களுக்கு உரியது. கோச்சடை நாட்டாண்மைக் காரருக்கு அவ்விழாவின் போது பரிவட்டம் கட்டப்படுகிறது. வைகை ஆற்றில் சிவபெருமான் குளிக்க, ஊற்று வெட்டும் உரிமை கோச்சடை செட்டியார்களுக்கே உரியது.

நாகர் கோயில் :

நாகர் கோயில் வைகைக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவில் முகமண்டபத்தில் எண்ணிடலங்கா நாகர் உருவங்கள் உள்ளன. மக்கட்பேறு இல்லாதவர்கள், அப்பேறு வேண்டி நேர்ந்து கொள்வதும், குழந்தை பிறந்த பிறகு நாகர் உருவத்தைப் பிரதிட்டை செய்வதும் வழக்கம். மதுரையில் பிராமணர்கள் கூட இம்மரபைப் பின்பற்றி வழிபடு கின்றனர்.

முத்தண்ணன் கோவில் :

மதுரையில் நாயக்கர் காலத்தில் குடியேறிய மறவர் குலத்து மக்கள், வேம்பு அரசு போன்ற மரங்களின் கீழ் முத்தண்ண சுவாமி வடிவத்தை அமைத்து வழிபடுகின்றனர். முத்தையா கோவில் பிரகாரத்தில் சன்னாசி, ஆதிபூசாரி, பேச்சியம்மன், முத்துக் கருப்பணசாமி, இருளப்பசாமி, வீரண்ணன் சாமி, இராக்காயி அம்மன், இருளாயி அம்மன், சப்பாணிச் சாமி, சேனைச் சாமி முதலிய தேவதைகள் சுடுமண்ணால் செய்யப் பட்டு வழிபடப்படுகின்றன. வனப்புமிகு சுடுமண் சிற்பங்களை இக்கோவிலில் கண்டு மகிழலாம். மூன்று மீட்டர் உயரமுள்ள நீண்ட குதிரை உருவத்தின் மீது கடுஞ்சீற்றத்துடன் முத்தையாவின் உருவம் காணப்படும். குதிரையின் பின்புறத்தில் அம்புகளும் வில்லும் காணப்படுகின்றன. இவை கிராமத் தெய்வங்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

முனியாண்டிக் கோவில் :

கிராமத் தெய்வமாக முனியாண்டியையும் இம்மாவட்டத்து மக்கள் பெரும்பாலோர் வழிபடுகின்றனர். முனியாண்டிக் கோவில் இல்லாத கிராமம் மிகச்சிலவே.

வாதபுரீசுவரர் கோவில் :

பழைமையும், எழிலார்ந்த தோற்றமும், அழகிய வேலைப்பாடும் கொண்டு பெரிய அள வினதாய் இக்கோயில் திகழ்கிறது. இக்கோயில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தான ஆட்சிக்குட்பட்டது. ஐந்தடுக்கு கோபுரம் கொண்ட இக்கோயிலின் உட்பகுதியில் சிற்ப வேலைப்பாடு கூடிய மண்டபம் இருக்கிறது. சைவ சமண வாதம் நிகழ்ந்த மண்டபம் இதுவே. இது மாணிக்கவாசரால் கட்டப்பட்டதென்றும், இம்மண்டபம் நூறு தூண்களைக் கொண்டதாக விளங்கியது என்றும் சொல்லப் படுகிறது. இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. ஆனால் சனி, ஞாயிறு திங்கள் ஆகிய மூன்று கடவுளருக்கும் தனித்தனிச் சந்நிதிகள் காணப்படுகின்றன. மாணிக்கவாசரது மூலத்திருவுருவமும் உற்சவ உருவமும் இக்கோவிலில் உள்ளன.

ஆவணி மூல விழாவுக்கு உற்சவ உருவ மாணிக்கவாசகர் மதுரைத் தலைநகர்க்கு எடுத்துச் செல்லப் படுகின்றார். நடராசருக்கு இக்கோவிலில் தனிச் சந்நிதி உண்டு. மார்கழி மாதத்தில் திருப்பள்ளி எழுச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இது திருவாதவூரில் அமைந்துள்ளது. இவ்வூரில் கண்ணொளி பெற மக்கள் வழிபடும் முழிச்சிப் பிள்ளையார் கோவிலும், திரெளபதி அம்மன் கோவிலும் உள்ளன. திரெளபதி அம்மன் தீமிதி விழா சிறப்பானதாகும். இது சங்கப்புலவர் கபிலரும், பாண்டியனின் தலைமை அமைச்சரான மாணிக்கவாசரும் பிறந்த ஊராகும்.

சுந்தர பாண்டியன் கோயில் :

மருதூரில் உள்ள இக்கோயிலை உள்ளுர் மக்கள் கிருஷ்ணன் கோயில் என்கின்றனர். இக்கோயில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்ட வைணவக் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் முகமண்டபத்தின் புறச்சுவர்களில் பாண்டியர், சோழர் கல் வெட்டுகள் காணப்படுகின்றன.

திருச்சுனைச் சிவன் கோயில் :

இக்கோயில் கருங்காலங்குடி என்னும் ஊரில் குன்றின் மீது பொலிவுடன் அமைந்துள்ளது. பாண்டியரால் கட்டப்பட்ட இக்கோயில் 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் விரிவுப்படுத்தப் பெற்றுச் சிறப்படைந்தது.

பள்ளிவாசல்களும், தர்க்கார்களும் :

மதுரை நகரில் காஜியார் தெரு பள்ளிவாசல், முனிச்சாலைப் பள்ளிவாசல், மேலமாசி வீதி பள்ளிவாசல், கட்ராப் பாளையம் தெரு பள்ளிவாசல், யானைக்கல் அருகிலுள்ள சங்கம் பள்ளிவாசல், தாசில்தார் பள்ளிவாசல் ஆகிய முக்கிய பள்ளிவாசல்கள் இருக்கின்றன. கி.பி. 1759 முதல் 1764 வரை மதுரையை ஆட்சி செய்த கான் சாகிப்பின் சமாதி மீது எழுப்பட்டுள்ள தர்கா அரசரடி சம்மட்டிப்புரத்தில் உள்ளது.

மதுரை தெற்கு வெளி வீதியில் மினா நூருதீன் தர்காவும், மேற்குவாசல் சின்னக்கடை வீதியில் முகையதீன் ஆண்டவர் தர்காவும் உள்ளன. கோரிப்பளையம் தர்கா மிகப் பழைமையானது. இங்கு மதுரையை ஆட்சி செய்த சுல்தான்கள் என்று கருதப்படும் சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா. சையத்சுல்தான் சம்சுதீன் அவுலியா என்ற இருவரின் சமாதி உள்ளது. இத்தர்காவில் காணப்படும் பல அம்சங்கள் இந்துகோயில் கலைச் சிறப்புகளைக் கொண்டுள்ளன. தர்காவின் மீது ஒற்றைக் கல்லாலான மேற் கூரை அமைக்கப்பட்டுள்ளது சிறந்த தொழில் நுட்ப சாதனையாகும்.

கிறிஸ்துவ ஆலயங்கள் :

புனித மரியன்னை தேவாலயம் கார்னியர் என்னும் பாதிரியாரால் 1842-இல் கட்டப்பட்டு, டிரிங்கால் பாதிரியார் காலத்தில் விரிவுப் படுத்தப்பட்டது. இது திருமலை மன்னர் அரண்மனைக்கருகில் உள்ளது. கோபுரங்களின் உயரம் சுமார் 45 மீட்டர். அழகிய வளைவுகளைக் கொண்டு, கவினுறக் காணப்படும் இப்பேராலயம் ஐரோப்பியக் கட்டிடக் கலை நுணுக்கங்களால் சிறப்புகிறது. மதுரையில் இதுவே கத்தோலிக்கரின் மிகப் பெரிய ஆலயமாக உள்ளது.

தெப்பக்குளத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயம், மதுரை கோசாகுளம் புதூரில் உள்ள லூர்து அன்னை ஆலயம், மதுரை இரயில்வே காலனியில் உள்ள திரு இருதய ஆலயம், மதுரை அண்ணா நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயம், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் கி.பி.1800-இல் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் ஆலயம், மதுரை பொன்னகரத்தில் 1920-இல் கட்டப்பட்ட வெப்நினைவாலயம், மதுரை கோரிப்பாளையம் அருகிலுள்ள அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் அமெரிக்க மிஷனரியால் கட்டப்பெற்ற ஆலயம் முதலியன முக்கிய கிருத்துவ ஆலயங்கள் ஆகும்.

சுற்றுலாத் தலங்கள் :

மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் கோயில், திருப்பரங்குன்றம், அழகர்கோயில், பழமுதிர் சோலை (இவைபற்றி காண்க: வழிட்டுத் தலங்கள்) திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம் முதலியன இம்மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களாகும்.

திருமலைநாயக்கர் மகால் :

Thirumalainayakar Mahalநாயக்க மன்னர்களுள் வரலாற்றுப் புகழ் படைத்து அன்றும் இன்றும் மக்கள் மனங்களில் வாழ்பவர் திருமலை நாயக்கர் ஆவார். இவர் கட்டிய மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள், மண்டபங்கள், தெப்பக்குளம், மகால், புதுமண்டபம் முதலியன இவரது புகழுக்கு அழியாத சின்னங்களாய் விளங்குகின்றன. திருமலை மன்னர் இறந்து 300 ஆண்டுகள் ஆயினும், மகால் புதுப்பிக்கப்பெற்று தமிழ்நாடு அரசின் தொல்பொருள் துறையின் கண்காணிப்பில் உள்ளது. புதிதாக அருட்காட்சிக் கூடமும் அமைக்கப் பட்டுள்ளது.

திருமலை நாயக்கர் அரண்மனையான மகால் மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. கி.பி.1523-இல் கட்டப்பட்ட இந்த அரண்மனை இன்றிருப்பதை விட நான்கு மடங்கு பெரிதாக இருந்தது. நாயக்கர்களின் கட்டிடக் கலையை நன்கு அறிவதற்கு இந்த அரண்மனை சிறந்த சான்றாக இருக்கிறது. இப்போது பார்வையாளர் கூடமாக இருக்கும் ஸ்வர்க விசாலம் இந்த அரண்மனையில் பெரிதும் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இங்குள்ள எந்த ஆதார பீடமும் இல்லாமல் 20 மீட்டர் உயரத்தில் கட்டப் பட்டுள்ள குவிந்த கூரை அமைப்பு நாயக்கர் கால பொறியியல் திறனுக்கு வியத்தகு சான்றாக இருக்கிறது. எல்லா நாட்களிலும் திருமலை நாயக்கரின் வாழ்க்கை வரலாறும், சிலப்பதிகாரமும் ஒலி-ஒளி காட்சிகளால் காட்டப்படுகின்றன.

இம்மாகாலை கட்டி முடித்து 300 ஆண்டுகள் ஆகின்றன. கட்டிடத்தைக் கட்டி முடிக்க முப்பத்தாறு வருடங்களThirumalainayakar Mahal் ஆயின. கடம்பவனமாயிருந்த இந்த இடத்தை அழித்து, வண்டியூர் தெப்பக்குளத்திலிருந்து மண் எடுத்து வந்து கட்டிடத்தைக் கட்டினார்கள். மண்வெட்டின இடம் பள்ளமாகிப் போனதும், அதைத் தெப்பக்குளமாகத் திருமலை நாயக்கர் மாற்றி விட்டார். தூண் ஒன்றின் உயரம் 20 மீட்டர். சுற்றளவு 4 மீட்டர். துணை வளைத்துப் பிடிக்க மூன்று பேர் கைகோத்து நிற்க வேண்டும். கடுக்காச்சாறு, கரும்புச்சாறு, அரபு நாட்டுச் சுண்ணாம்பு, பதனீர் இவ்வளவும் சேர்த்து சாந்து கூட்டிக் கட்டப்பட்டதென்பர். பத்துத் தூண் சந்து, மகாலுக்கு வடக்கே உள்ளது. இங்குள்ள 20மீ உயரமுள்ள கருங்கல் தூண்களில் யானைகள் கட்டப்பட்டிருந்ததாகக் கூறுவர். மகாலில் அந்தபுரமும் நாளோலக்க இருக்கையும் காணத் தக்கவையாகும். தினமும் காலை 9 மணியிலிருந்து 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணியிலிருந்து 5 மணி வரையிலும் திறக்கப்படுகிறது.

காந்தி அருங்காட்சியகம் :

Gandhi Mandapamராணி மங்கம்மாள் கட்டி வாழ்ந்த பழைய அரண்மனையில் இப்போது காந்தி அருங் காட்சியகம் இயங்குகிறது. இது தமுக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. தேசத் தந்தை காந்தியடிகள் வாழ்ந்த ஆசிரமும், அவர் பயன்படுத்திய பொருள்களும், புத்தகங் களும், எழுதிய கடிதங்களும், அவருடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் படங்களும் ஓவியங்களும் காணத்தக்கவை. காந்தியடிகள் கொலை செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேட்டியும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியகம் இந்திய விடுதலை இயக்கத்தின் வரலாற்றை அறிய உதவுகிறது. இங்குள்ள திறந்தவெளி அரங்கத்தில் காந்தியம் பற்றி விரிவுரைகளும் வகுப்புகளும் நடைபெறுகின்றன. தென்னக கிராமியத் தொழில்களால் உருவான கைவினைப் பொருட்காட்சி இங்கு நிரந்தரமாக நடைபெறுகிறது. காலை 10 மணியிலிருந்து 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணியிலிருந்து 6 மணிவரை திறந்துவிடப்படுகிறது. புதன் கிழமை விடுமுறையாகும்.

Thanks n Regards

Jeevanandam K

About அரியலூர்


 

தலைநகரம் : அரியலூர்
பரப்பு : 1949.31 ச.கி.மீ
மக்கள் தொகை : 695,524
எழுத்தறிவு : 388,605 (64.08%)
ஆண்கள் : 346,763
பெண்கள் : 348,761
மக்கள் நெருக்கம் : 1 ச.கீ.மீ – க்கு 278

வரலாறு :

அரியலூர் மாவட்டம் பல காலம் திருச்சி மாவட்டத்துடன் இணைந்திருந்த காரணத்தால், திருச்சி மாவட்டத்தின் வரலாறு பெரம்பலூர் மாவட்டத்திற்கும் பொருந்தும் (காண்க : திருச்சி மாவட்டம்). நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

எல்லைகள் :

வடக்கில் சேலம், கடலூர் மாவட்டங்களையும், கிழக்கில் கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களையும், மேற்கில் கரூர், நாமக்கல் மாவட்டங்களையும் பெரம்பலூர் மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

பொது விபரங்கள் :

வருவாய் நிர்வாகம் :

கோட்டங்கள்-3 (பெரம்பலூர், அரியலூர், குன்னம், உடையார்பாளையம், செந்துறை); வருவாய் கிராமங்கள்-408.

உள்ளாட்சி நிறுவனங்கள் :

நகராட்சி-1 (துறையூர்); ஊராட்சி ஒன்றியம்-10 (பெரம்பலூர், வேப்பந்தட்டை, அரியலூர், திருமானுர், வேப்பூர், ஆலத்தூர், ஜெயங்கொண்டம், தா.பளூர், ஆண்டிமடம், செந்துறை); பேரூராட்சி-11.

சட்டசபைத் தொகுதிகள் :

6 (பெரம்பலூர், உப்பிலியாபுரம், வரகூர், அரியலூர், ஜெங்கொண்டம், ஆண்டிமடம்).

பாராளுமன்றத் தொகுதி :

1 (பெரம்பலூர்)

வழிபாட்டுத் தலங்கள் :

கங்கை கொண்ட சோழபுரம் :

Gangai konda chola puramமுதலாம் இராஜேந்திர சோழன் தமிழகத்தின் தலைச்சிறந்த மன்னனாக 11 ஆம் நூற்றாண்டில் விளங்கினான். இவன் கடல் கடந்து கடாரத்தையும், மற்றும் பல தீவுகளையும் வெற்றி கொண்டான். இந்தியாவின் வடக்கே கங்கை நதி வரை இராஜேந்திர சோழனின் வெற்றிக் கொடி பறந்தது. இதனால் இவனுக்குக் கங்கை கொண்ட சோழன் என்ற பெயர் வந்தது. இம்மாபெரும் வெற்றிக்கு எடுத்துக் காட்டாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற இந்நகரை நிர்மாணித்து, இங்கே அழியாத கோயில் ஒன்றைத் தோற்றுவித்தான். பிறகு இராஜேந்திர சோழன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான். அதன் பிறகு வந்த அனைத்து சோழ மன்னர்களும் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலைநகராய்க் கொண்டிருந்தனர். சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்கனின் அமைச்சராய்ப் பணிபுரிந்த இடம் கங்கை கொண்ட சோழபுரமாகும்.

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை விடச் சற்று உயரம் குறைந்தது எனினும் கட்டிட அமைப்பில் நுணுக்கத்தில் மிகச் சிறந்தது. பல்வகை உறுப்புக்களைப் புதுமையாக அமைத்து இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிற்பங்களும் மிகச் சிறப்பாக விளங்குகின்றன. கங்கை கொண்ட சோழபுரத்திலும் விமானமே மிகவுயர்ந்ததாக விளங்குகிறது.
Gangai konda chola puram
இதன் முன்னர் இருந்த மகாமண்டபத்தின் பெரும்பகுதி இழந்து போய், அதன் கற்கள் கீழணை கட்ட எடுத்துச் செல்லப்பட்டன. இப்போதுள்ள மண்டபம் பின்னர் சீர்செய்யப்பட்டது. இக்கோயிலைக் சுற்றி இரண்டு நிலைகளைக் கொண்ட திருச்சுற்று இருந்தது. அதன் ஒரு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. கோயிலுக்கு முன் நின்ற கோபுரத்தின் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது. இக்கோயில் விமானம் தஞ்சையில் உள்ளதினின்றும் சற்று வேறுபட்ட அமைப்பை உடையது. இதன் கீழ்நிலை சதுரமாகவும், மேல்நிலைகள் எண் பட்டையாகவும், சிகரம் வட்டமாகவும் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் உயரம் 186 அடி ஆகும்.

தஞ்சை விமானத்தின் புறத்தோற்றத்தில் நேர்கோடுகள் அமைய, இதில் வளைகோடுகள் அமைகின்றன. விமானத்தின் மூலைகள் சிறிது உட்குழிவாகவும், பக்கங்கள் சற்று வளைந்து புறக்குழிவாகவும் உள்ளன. இங்குள்ள சிவலிங்கம் மிகவும் பெரியது. பெருவுடையார் என்ற பெயருக்கேற்ப அமைந்துள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் கோயிலிலுள்ள சிற்பங்கள் அழகில் ஒப்பற்றவையாக காணப்படுகின்றன. ஞானத்தின் உருவாய், கலைகளின் இருப்பிடமாய் பத்மாசனமிட்டு வெள்ளைத் தாமரை மீது அமர்ந்திருக்கும் கலைமகள் சிற்பம் மிகவும் அழகியதாய் அமைந்திருக்கிறது.

Gangai konda chola puramஅடியான் சண்டிக்கு முடியிலே மலர்மாலை சூட்டி அருள்பாலிக்கும் சண்டீச்வர பிரசாத தேவராக காட்சியளிக்கும் சிவபிரானின் சிற்பமும் கண்ணைக் கவர்கிறது. இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற் போல், முகத்தில் தெய்வீகப் புன்னகையுடன் காலைத் தூக்கி கூத்தாடும் பெருமானின் அற்புதத் திருக்கோலம் அமைந்திருக்கிறது. அந்த அற்புதக் கூத்தனின் காலடியிலே எலும்பின் உருவாய் கையிலே தாளம் கொண்டு அமர்ந்திருக்கும் காரைக்கால் அம்மையார் சிற்பமும் சிறப்பாய் அமைந்திருக்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து 71 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து வடக்கே 35 கி.மீ தொலைவிலும் உள்ளது.
 

கலியுக வரதராசப் பெருமாள் கோயில் :
Kaliyuga
இவ்வைணவக் கோயில் விழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் உள்ள அரியலூருக்குக் கிழக்கில் 3 மைல் தூரத்திலிருக்கும் கல்லங்குறிச்சி என்னும் ஊரில் உள்ளது. இதைக் கலியபெருமாள் கோவில் என்றும் சொல்கிறார்கள். சுமார் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் தென்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இக்கோயிலுக்கு நான்கு வாயிற்படிகள் அமைந்துள்ளன. 16 1/2 அடி உயரத்தில் சுற்றுமதில் சுவரும் எழுப்பப் பட்டுள்ளது. தலவிருட்சம் மகாலிங்க மரமாகும். கிழக்கு கோபுர வாசலின் கீழ்பால், கருங்கல்லால் ஆன நாற்கால் மண்டபம் உள்ளது. உற்சவ மூர்த்திகள் வெளியில் செல்லும் முன்னும், உள்ளே நுழையும் முன்னும் இம்மண்டபத்தில் ஆராதனை நடத்தப்படுகிறது. கோவிலுக்கு எதிரில் தெப்பக்குளம் உள்ளது. நாளொன்றுக்கு நான்கு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.

மக்கள் இதை சக்திவாய்ந்த கடவுளாக நம்புவதால் தினமும் கூட்டம் மிகுந்திருக்கிறது. சொந்தமாக உள்ள இரு தேர்களில் ஒன்றில் பெருமாளும், மற்றொன்றில் அனுமாரும் ஊர்வலம் வருவார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் மக்கள் திரளாக வருவர். தானியங்கள் காணிக்கையாக வழங்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமியின் போது 11 நாட்கள் விழா நடைபெறுகிறது. தேர்த்திருவிழாவுக்கு மறுநாள் நடக்கும் ஏகாந்த சேவை சிறப்பானதாகும். இக்கோவில் ஆதரவில் ஒரு மகளிர் உயர்நிலைப் பள்ளியும், உணவு விடுதி, நூல்நிலையம், சித்த மருத்துவமனை முதலியனவும் செயல்பட்டு வருகின்றன.

முக்கிய ஊர்கள் :

பெரம்பலூர் :

மாவட்டடத் தலைநகராய் விளங்குகிறது. மக்கள் தொகை மிகுதி. நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் போக்குவரத்து அதிகம். வேளாண்மை சிறப்பாக நடை பெறுகிறது. இங்குள்ள பெருமாள் கோவில் புகழ் பெற்றது. கண்நோய்க்கு இக்கோயிலில் பூக்கும் நத்தியாவெட்டைப் பூவை கண்களில் ஒற்றிக் கொள்வர். இங்குள்ள வெள்ளந் தாங்கி அம்மன் கோவிலும் மக்களால் பூசிக்கப்படும் பெரிய கோயிலாகும். அரசு அலுவலகங்கள், வங்கிகள், திரைப்பட அரங்குகள், பஸ் வசதி, தந்தி, தபால் வசதி முதலியவற்றால் சிறந்த நகரமாகத் திகழ்கிறது.

அரியலூர் :

விஜய நகரச் அரசர்கள் தமிழகத்தை சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தனர். இந்தப் பேரரசில் கி.பி.1490 முதல் ஆட்சி செய்த திம்மராயர் புகழ் பெற்றுத் திகழ்ந்தார். இவரே அரியலூர் குறுநில மன்னரை நியமித்த பேரரசர். திம்மராயர் காலத்தில் தென்னாட்டில் மக்களுக்குக் கொடியவர்களாலும், கொடிய மிருகங்களாலும் பெருந்துன்பங்கள் ஏற்பட்டன. இத்துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு இராமநயினார் என்பவரை திம்மராயர் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவர் தென்னிந்தியாவிற்கு வந்து அக்கொடியவர்களை அடக்கிவிட்டுத் திரும்பும்போது கொள்ளிடத்திற்கு வடபால் பயங்கர காடு ஒன்று இருந்தது. இந்தக் காட்டை திருத்தி நாடாக்க இராமநயினார் விரும்பினார்.

கொள்ளிடத்திற்கு வடக்கிலும், வெள்ளாற்றுக்குத் தெற்கிலும், ஊட்டடத்தூருக்குக் கிழக்கிலும், சிதம்பரத்திற்கு மேற்கிலுமாக கிராம பூமிகளை உண்டாக்கி, அதற்கு அரியலூர் எனப் பெயர் சூட்டினார். பிறகு இராமநயினார் அரியலூர் குறுநில மன்னராக திம்மராயரால் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1491 தொடங்கி 1951 வரை அரியலூரை ஆண்டார். அரியலூர் அரண்மனை முகமது அலியின் படையெடுப்பால் நாசமானதாகத் தெரிகிறது. அரியலூர் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் தலைசிறந்த பேரூராட்சியாகத் திகழ்கிறது. ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராய் விளங்கும் இவ்வூரில் மக்கள்தொகை மிகுதி.

Ariyalurவிழுப்புரம்-திருச்சி குறுவழி இரயில் பாதையில் அரியலூர் உள்ளது. புகழ்பெற்ற கலியபெருமாள் கோவிலால் ஊர் சிறப்புறுகிறது. மேலும் இவ்வூரில் காமாட்சியம்மன் கோவில், சஞ்சீவிராயன் கோவில், கைலாசநாதசாமி கோவில், அரியபுத்திரசாமி கோவில் ஆகியன உள்ளன. வீதிக்கு ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. அரசு மேனிலைப்பள்ளி, எஸ்.பி.ஜி. உயர்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேனிலைப்பள்ளி, மாதாக்கோவில் நடுநிலைப்பள்ளி, ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் 1965 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கலைக்கல்லூரியும் இவ்வூரில் உள்ளன. இது சிறந்த வணிகத் தலமாகவும் திகழ்கிறது.

பல சிமெண்டு தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும், மருத்துவமனைகளும், வங்கிகளும் நிறைந்தAriyalurு காணப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தை கூடுகிறது. முக்கியமாக ஆடு விற்பனை சந்தையில் சிறப்பாக நடைபெறுகிறது. அரியலூர் வட்டம் சுமார் இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்ததாக புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதன் அடிப்படையில் இப்பகுதியில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வூருக்கு வடகிழக்கில் உள்ள கல்லமேடு அருகே 60 அடி நீளம், 18 அடி உயரம் கொண்ட ராட்சதப் பிராணியின் பல் ஒன்று கி.பி.1860 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

அரியலூருக்கு அருகில் மேற்குச் சாத்தனுர் கிராமத்தில் ஒரு பெரிய கல்மரம் விழுந்து கிடக்கிறது. 16 அடி நீளமும், 4 அடி சுற்றளவும் கொண்ட இம்மரம் வேர்களுடனும் கிளைகளுடனும் காணப்படுகிறது. இதைப் பல நாட்டினரும் வந்து பார்த்து ஆய்வு செய்கிறார்கள். 1923 இல் பெங்களூர் மத்திய கல்லூரிப் புவியியல் பேராசிரியர் இராமராவ் என்பவர் ஒரு ராட்சதப் பிராணியின் முதுகெலும்பைக் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்புகள், இப்பகுதியில் பெட்ரோல், நிலக்கரி, தங்கச் சுரங்கம், எண்ணெய் ஊற்று, ஆகியன இருப்பதை உறுதிப் படுத்துகின்றன. இப்பகுதியில் சுண்ணாம்புக் கல், ஜிப்சம், வெள்ளைக் களிமண், அப்ரேகம் முதலிய கனிமப் பொருட்கள் கிடைக்கின்றன.

துறையூர் :

துறையூரில் நெசவுத் தொழிலை மேற்கொண்டுள்ள செங்குந்தர் மரபினர் பெருந்தொகையினராக வாழ்கின்றனர். இவர்கள் நெய்யும் உறுதியான வேட்டி சிறப்புடையது. இங்கு நீண்ட கடைவீதி உள்ளது. வாணிகத்திற்குச் சிறந்த இடம். போக்குவரத்து வசதி பெற்றுள்ளது. துறையூருக்கருகில் பச்சை மலைப் பகுதியின் பெரும்பகுதி தென்படுகிறது. இந்த மலையின் உயரம் 2500 அடி. இதன் பரப்பு 15 ச.மைல். இங்கு சுமார் 5000 பேர் வசிக்கின்றனர். நெல், சாமை, கம்பு முதலியன இங்கு முக்கிய விளைபொருட்கள். பலாவும் எலுமிச்சையும் மிகுதியாக விளைகின்றன. பச்சைமலையில் வாழும் மளையாளிகள் உளுந்து, மொச்சை, கொட்டைமுத்து ஆகியவற்றைப் பயிரிடுகின்றன. இவர்கள் வேட்டை நாய்களையும், செந்நாய்களையும் வளர்க்கிறார்கள்.

Thuraiyurதுறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளுக்குத் துறையூரில் ஒரு மடம் இருக்கிறது. இவ்வூர் வைணவச் செல்வாக்குப் பெற்றது. சுற்றியுள்ள பல ஊர்களின் பெயர்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஸ்ரீரங்கத்திறகு முன்னமே ஏற்பட்டதாகக் கருதப்படும் திருவெள்ளறைப் பெருமாள் கோயில் இங்கிருக்கிறது. காசி, கங்காராம் விசுவநாதர் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இவ்வூர் திரெளபதி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

அருகிலுள்ள சிங்களாண்டபுரம் என்னும் சிற்றுரை ஒரு காலத்தில் சிங்கள மன்னன் ஒருவன் ஆண்டதாகச் சொல்லப்படுகிறது. துறையூரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள மலை மீது பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டிருக்கிறது. மலையின் உயரம் 400 அடி. மலையுச்சியை அடைய வசதியாக படிக்கட்டுகள் வெட்டப்பட்டுள்ளன.

திருச்செந்துறை :

எலமனுருக்குத் தென்கிழக்கில் அமைந்துள்ள இவ்வூரில் சிவாலயம் சிறந்து காணப்படுகிறது. இக்கோவிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

எலக்குரிச்சி :

ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு தென்மேற்கில் 25 மைல் தொலைவில் உள்ளது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தால் ஊர் சிறப்பு அடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் இவ்வாலய திருவிழாவிற்கு பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூடுவர்.

ஜெயங்கொண்ட சோழபுரம் :

வட்டத் தலைநகராய் விளங்குவதால் பல அலுவலகங்கள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் ஜைனமதம் பரவி இருந்ததிற்கான சான்றுகள் பல உள்ளன. இப்பகுதி நெடுஞ்சாலை போக்குவரத்து மிகுந்தது. நெசவுத்தொழில், உலோகப் பாத்திரத் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

உடையார்பாளையம் :

ஜெயங்கொண்டதிற்கு மேற்கில் 5 மைல் தூரத்தில் இவ்வூர் உள்ளது. வட்டத் தலைநகர். அரசு அலுவலகங்களும், வாணிபச் சிறப்பும், போக்குவரத்தும் இவ்வூரின் வளர்ச்சிக்குத் துணையாகின்றன. இங்குள்ள சிவன் கோவில் பிரபலமானது. தோல் பொருட்களுக்கும், ஜமக்காளத்திற்கும், கைத்தறித் துணிகளுக்கும் இவ்வூர் பெயர் பெற்றது. இவை பல இடங்களுக்கும் இங்கிருந்து அனுப்பப்படுகின்றன.

ஊட்டத்தூர் :

பெரம்பலூருக்குக் கிழக்கில் 15 மைல் தொலைவில் உள்ளது. இவ்வூரிலும் இதன் சுற்றுபுரங்களிலும் பாஸ்பேட் கிடைக்கிறது. அப்பர் பாடிப் பூசித்த சிவாலயம் இவ்வூர்ச் சிறப்புக்குக் காரணமாக உள்ளது. செல்லியம்மன் கோவிலும் உள்ளது. இங்குப் பிரெஞ்சுக்காரர் களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பல போர்கள் நிகழ்ந்துள்ளன.

குரும்பாலூர் :

மரவேலைப்பாட்டிற்கும், பாத்திரம் தயாரிப்பதற்கும் இவ்வூர் பெயர் பெற்றது. இவ்வூர் பெரம்பலூருக்கு மேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது.

தொழில் :

டால்மியாபுரம் சிமெண்டு தொழிற்சாலை :

டால்மியாபுரத்தில் சிமெண்டு தொழிற்சாலை நடைபெறுகிறது. இத்தொழிலகத்திற்காக டால்மியாபுரம் என்னும் இரயில்நிலையம் அமைந்தது. கல்லக்குடி பெயர் மாற்றத்தின் போது மக்கள் மத்தியில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் டன் சிமெண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சுமார் 2500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

அரியலூர் சிமெண்டு தொழிற்சாலைகள் :

அரியலூருக்குக் கிழக்கில் மணலேரி என்னும் ஊருக்கு அருகில் அரசினர் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும், அரியலூருக்குத் தெற்கில் தனியார் துறையினரால் நடத்தப்படும் சிமெண்டுத் தொழிற்சாலை ஒன்றும் இயங்கி வருகின்றன.

Thanks n Regards

Jeevanandam K