இந்திய அரசியலமைப்பு- பாகம்-2


 

இந்திய அரசியலமைப்புபாகம்-2

இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நெருக்கடி நிலைகள் – மூன்று

1. தேசிய நெருக்கடி நிலை

2. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி

3. நிதி நெருக்கடி நிலை

* தேசிய நெருக்கடியை (National Emergency) விவரிக்கும் ஷரத்து – ஆழ்ற் 352

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பவர் – ஜனாதிபதி

* தேசிய நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கான காரணங்கள்

1. போர்

2. போர் மூலம் அபாயம்

3. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு

4. வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பிற்கான அபாயம்

5. உள்நாட்டுக் கலவரம்

* தேசிய நெருக்கடியின் கால அளவு 6 மாதங்கள் மட்டும்.

* 6 மாதத்திற்குப் பிறகு, மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க அதிகாரம் பெற்றவர் ஜனாதிபதி

* ஜனாதிபதி ஆட்சியை குறிக்கும் ஷரத்து – ஆழ்ற் 356

* ் முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமலான வருடம் 1951

* முதன்முதலில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் இதுவரை ஜனாதிபதி ஆட்சி 102 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலம் பஞ்சாப்

* இந்தியாவில் அதிகமுறை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியவர் இந்திராகாந்தி

* நிதி நெருக்கடி நிலையைப் பற்றிக் கூறும் ஷரத்து- ஆழ்ற் 360

* நிதி நெருக்கடி நிலை பயன்படுத்தப்படும்போது பாராளுமன்றத்தின் அனுமதி பெறவேண்டிய கால அளவு 6 மாதங்கள்

* நிதி நெருக்கடி நிலைக்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை பாராளுமன்ற அனுமதி தேவையில்லை.

* நிதி நெருக்கடி நிலை இந்தியாவில் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.

* 1. மாநில அரசுப் பணியாளர்களின் (உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* 2. மத்திய அரசின் பணியாளர்களின் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட) சம்பளம் குறைக்கப்படும்.

* நெருக்கடி நிலையின்போது பாதிக்கப்படாத அடிப்படை உரிமை ஆழ்ற் 21

நிதி ஆணையகம்

* நிதி ஆணையகத்தை நிர்மாணிப்பவர் – ஜனாதிபதி

* நிதிஆணையத்தின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்

* நிதி ஆணையகத்தின் மொத்த உறுப்பினர்கள் – 5 பேர்

* நிதி ஆணையகத்தின் தலைவர் – ஐவரில் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவர்

* நிதி ஆணையகம் என்பது – இந்திய அரசியல் அமைப்பின்படி அமைக்கப்பட்டது.

* முதல் நிதி ஆணையகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1951

* முதல் நிதி ஆணையகத்தின் தலைவர் – கே.சி. நிகோய்

* பத்தாவது நிதி ஆணையகத்தின் தலைவர் – கே.சி. பந்த்

* பதினோராவது நிதி ஆணையகத்தின் தலைவர் பேராசிரியர் – ஏ.எம். குஸ்ரோ

* நிதிக்குழுவின் முக்கியப் பணிகள்: மத்திய – மாநில அரசுகளுக்கிடையே வரி ஆதாரங்களைப் பிரித்துக் கொடுப்பது மத்திய அரசினால் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்படும் நிதி உதவியை பெறுவதற்கான விதிமுறைகளை வகுப்பது.

தேர்தல் ஆணையம்

* தேர்தல் ஆணையகம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

* தேர்தல் ஆணையகம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324

* தேர்தல் ஆணையகம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

* தேர்தல் ஆணையகத்தின் மூன்று ஆணையர் களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

* தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)

* தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

* ் தேர்தல் ஆணையகத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

* ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

* தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

* புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது – தேர்தல் ஆணையகம்.

* முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது – தேர்தல் ஆணையகம்.

* கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியை யும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது – தேர்தல் ஆணையகம் ஆகும்.

திட்டக்குழு

* திட்டக்குழுவின் தலைவர் – பிரதமர்

* திட்டக்குழுவின் உறுப்பினர்கள் – மாநில முதலமைச்சர்கள்

* திட்டக்குழு என்பது – ஒரு ஆலோசனைக் குழு

* தற்போதைய திட்டக் குழுவின் தலைவர் – பிரதமர் மன்மோகன் சிங்

* தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா

* ஐந்தாண்டு திட்டங்களின் மீதான ஆலோசனையைத் தரும் அமைப்பு – திட்டக்குழு

தேசிய வளர்ச்சிக்குழு

* தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவர் – பிரதமர்

* ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட முடிவான அங்கீகாரம் தரவேண்டிய அமைப்பு – தேசிய வளர்ச்சிக்குழு ஆகும்.

இணைப்புப் பட்டியல்கள

* ் தற்போது இந்திய அரசியலமைப்பில் உள்ள பட்டியல்களில் எண்ணிக்கை 12 ஆகும். 

* அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது இருந்த பட்டியல்களின் எண்ணிக்கை 8 தான். 

* 1951, 1985, 1992, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்திருத் தங்கள் மூலம் பின்னர் இணைத்துக் கொள்ளப் பட்டன. 

பட்டியல் -1

இந்திய யூனியனின் அடங்கியுள்ள மாநிலங் களையும், மத்திய ஆட்சிப்பகுதிகளையும் பற்றி விவரிப்பது முதல் பட்டியலாகும். தற்சமயம் 28 மாநிலங்களும், 6 மத்திய ஆட்சிப் பகுதிகளும் (யூனியன் பிரதேசங்கள்) ஒரு தேசிய தலைநகர் பகுதியும் இந்தியாவில் உள்ளன.

பட்டியல் -2

இந்தியக் குடியரசுத் தலைவர், துணைக் குடியர சுத் தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை சபாநாயகர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், தலைமைக் கணக்காய்வர், சட்டமன்றத் தலைவர் ஆகியோரது சம்பளம் மற்றும் பிற வசதிகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இது ஐந்து பிரிவுகளைக் கொண்டது.

பட்டியல் -3

பதவிப்பிரமாணம் மற்றும் உறுதி மொழிகள் பற்றி விளக்குவது மூன்றாவது பட்டியலாகும். மத்திய மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைக் கணக்காய்வர் ஆகியோரது பதவிப்பிரமாணம், இரகசியக் காப்புக் பிரமாணம் மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் இப்பட்டியலில் விளக்கப் பட்டுள்ளன.

பட்டியல் -4

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் ஒதுக்கீடு தொடர்பானது நான்காவது பட்டியல். மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர் களைப் பிரித்தளிப்பது பற்றிய விளக்கம் தரப்படுகிறது

பட்டியல் -5

தாழ்த்தப்பட்டோர் (SC) மற்றும் பழங்குடி மக்கள் (ST) வாழும் பகுதிகளின் கட்டுப்பாடும் நிர்வாகமும் பற்றி விளக்குகிறது. பாராளுமன்றத் தில் எளிதான மெஜாரிட்டி மூலம் இப்பட்டியல் களைத் திருத்த இயலும் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பட்டியல் -6

அசாம், மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் நிர்வாகம் பற்றி ஆறாவது பட்டியல் விவரிக்கிறது.இப்பட்டியலும் எளிமையான மெஜாரிட்டி மூலம் பாராளுமன்றத்தில் திருத்தப்படலாம்.

பட்டியல் -7

மத்திய – மாநில அரசுகளின் அதிகாரம் செயல்பாடுகள் பற்றி ஏழாவது பட்டியல் விளக்குகிறது. இதில் மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.

(அ) மத்தியப் பட்டியல்

இது மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. மத்தியப் பட்டியலில் மொத்தம் 97 துறைகள் உள்ளன. இவற்றில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்டது மத்திய அரசு, பாதுகாப்பு, அணுசக்தி, தேசிய நெடுஞ்சாலைகள், விமான, கப்பல் போக்குவரத்துக்கள், காப்பீட்டுக் கழகங்கள், மக்கள்தொகை, நதிகள், தொலைபேசி, பண அச்சடிப்பு இது போன்ற முக்கியமான 97 துறைகள் மத்திய அரசின் அதிகாரத்தில் உள்ளன.

(ஆ) மாநிலப்பட்டியல்

இது மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் பற்றியது. ஆரம்பத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த துறைகள் 66. இவற்றில் கல்வியும், விளையாட்டும் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டமையால், தற்போது 64 துறைகள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருகின்றன. விவசாய வருமானவரி, நகராட்சி. சிறைச்சாலைகள், சுங்கக் கட்டணங்கள், கேளிக்கை வரி போன்ற 64 துறைகள் மாநிலப்பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் சட்டம் இயற்றும் உரிமை பெற்றவை மாநில அரசுகள்.

(இ) பொதுப்பட்டியல்

இது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள பொதுவான அதிகாரங்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுப் பட்டியலின் தொடக்கத்தில் 47 துறைகள் இருந்தன. கல்வியும் விளையாட்டும் தற்போது பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட்டதால் தற்போது பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மொத்தம் 49. காடுகள், மின்சாரம், தொழிற்சாலைகள், உணவுப் பொருட்கள், திருமணம், கல்வி, விளையாட்டு உட்பட 49 துறைகள்மீது சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றவை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆகும்.

பட்டியல் -8

அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளைப் பற்றி விவரிப்பது எட்டாவது பட்டியல் ஆகும். அசாம், பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது, மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி என்பன எட்டாவது பட்டியல் குறிப்பிடும் மொழி களாகும். 2003-ம் ஆண்டு மைதிலி, போடோ, சாந்தலி, டோக்ரி ஆகிய நான்கு மொழிகள் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டன.

பட்டியல் -9 :

நீதிமன்றங்களின் மறுபரிசீலனைக்கு அப்பாற் பட்ட சட்டங்களைப் பற்றி விவரிப்பது ஒன்பதா வது பட்டியலாகும். அரசியல் சட்டத்திருத்தம் -1 இன் மூலம் 1951-ம் ஆண்டு இப்பட்டியல் இணைக் கப்பட்டது. நிலக்குத்தகை, நிலவரி, ரயில்வே, தொழிற்சாலைகள் இது போன்றவற்றின் சட்டங் களும் ஆணைகளும் இதில் உள்ளன. 9-வது பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் சட்டம் ஜமீன் தாரி ஒழிப்புச் சட்டமாகும். தமிழ்நாட்டில் 69% பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் மசோதா 1993-ல் 85-வது சட்டத்திருத்தத்தால் நிறைவேற்றப்பட்டு இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டியல் -10 :

கட்சித் தாவல் தடைச் சட்டம் பற்றி விவரிப்பது பத்தாவது பட்டியலாகும். 1985-ம் ஆண்டு 52-வது சட்டத் திருத்தத்தின் மூலமாக இப்பட்டியல் அர சியலமைப்பில் இணைக்கப்பட்டது. இச்சட்டப்படி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தாய்க்கட்சியை விட்டு விலகி புதிய கட்சியில் சேர்ந்தாலோ, புதிய கட்சியை உருவாக்கினாலோ அவரது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். மூன்றில் ஒரு பங்கு கட்சியினர் தாய்கட்சியை விட்டு விலகினால் அச்சமயம் பதவி பறிபோகாது. அது கட்சிப்பிளவு எனக் கருதப்படும்.

பட்டியல் -11 :

பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி நிறுவனங் களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய ஆட்சி அதிகாரம் பற்றி பதினோராவது பட்டியல் விளக்குகிறது. 1992-ம் ஆண்டு, 73-வது சட்டத் திருத்தத்தின்படி, 29 துறைகளில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பட்டியல் -12:

இது நகர்பாலிகா மற்றும் நகரப்பஞ்சாயத்து களுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகாரம் தொடர்பானது பனிரெண்டாவது பட்டியலாகும். 1992-ல் 74 சட்டத்திருத்தத்தின்படி, இது அர சியலமைப்பில் சேர்க்கப்பட்டது. நகரப் பஞ்சாயத்துக்கள் 18 துறைகளில் பெற்றுள்ள அதிகாரங்கள் பற்றி இப்பட்டியலில் விளக்கப்பட்டுள்ளன.

எதிர்த்து வழக்கு போடுவதையும் இது தடை செய்தது.

இந்திய மொழிகள்

* இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன.

* ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் 33 மொழிகளை பேசுகின்றனர்.

* தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

* இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக ஆங்கில மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* இந்திய அரசியலமைப்பால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆகும்.

 

Thanks n Regards

Jeevanandam K

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s