“தெரிந்து கொள்வோம்”

“தெரிந்து கொள்வோம்”

அவசர கால முதலுதவி முறைகள்…!

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

"தெரிந்து கொள்வோம்" 

தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்...

அவசர கால முதலுதவி முறைகள்...!

Thanks n Regards
jeevanandam K

குப்பை மேனி மருத்துவக் குணங்க

குப்பை மேனி மருத்துவக் குணங்கள்

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதுப் போலும். வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி.

தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.
குடும்பம் :- EUPHORBIACEAE.

இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் காணப்படுகிறது.

இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது.

சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர்.

வசீகரப்படுத்தும்இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .

நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலை வலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

வயற்றில் இருக்கும் குடற் பூச்சிகளை போக்கவல்லது . இதன் வேர் கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

தோல் நோய் நீக்கும் குப்பைமேனி!

மருத்துவ குணங்கள்: குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.

குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.

குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.

குப்பைமேனி இலையை அரைத்து சாறு எடுத்து 2 தேக்கரண்டியளவு 12 வயது வரை உள்ள சிறியவர்களுக்குக் கொடுக்க வயிற்றைக் கழியச் செய்து கோழையை அகற்றும். வயிற்றுப் புழுவைக் கொல்லும்.

குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.

குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி இலையைக் கீரையாக ஆமணக்கு எண்ணெயில் தாளித்து ஒரு மண்டலம் (48 நாள்கள்) தொடர்ந்து உண்டுவர வாய்வுடனே சேர்ந்த பொல்லாத சேத்துமப்பிணிகள் எல்லாவற்றையும் போக்கி, உடல் நலம் பெறும்.

குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

குப்பைமேனி வேரை அரைத்து 5 கிராம் எடுத்து 3 நாளுக்கு 3 வேளை சாப்பிட்டுவர எலிக்கடி குணமாகும். இந்த சமயத்தில் வாந்தியையும் கழிச்சலையும் உண்டாக்கும். (ஆனால் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும்)

எப்போதும் எந்த மூலிகைகளையும் தகுந்த மருத்துவரை ஆலோசித்து பின் உள்ளுக்கு சாப்பிடுவது நல்லது .இது அணைத்து மூலிகைகளுக்கும் பொருந்தும் .

மேலும் எந்தமூலிகையும் சுத்தி செய்தல் என்று ஒரு முறை உள்ளது .அது இன்னும் பலரிடம் ரகசியமாகவே இருக்கிறது .மேலும் மூலிகைகளின் மாந்திரிகத்தன்மை குறித்தும் பெரிய தகவல்கள் மர்மமாக உள்ளது .ஒட்டுன்னிகளைப் பற்றியும் பல தகவல் உள்ளது .

Jeevanandam K

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

Thanks n Regards

Jeevanandam K

free e-books

கல்லூரி மாணவர்களுக்கான நூல்களைப் பெற இத்தளம் பயன்படுகிறது. உயர்கல்விப் பயிலும் மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் நூலங்கள் கொடுக்கும் புத்தகங்களைத் தவிர மற்ற துறைச் சார்ந்த புத்தகங்களை அளிக்கிறது http://www.bookboon.com என்ற இணையதளம்.

இத்தளத்தில் கல்லூரி மாணவர்கள் தங்களுடைய உயர்கல்விக்குத் தேவையான புத்தகங்களை PDF கோப்புகளாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
free e-books for higher studies students

இத்தளத்தில் நூலின் தலைப்பு, நூல் ஆசிரியர் பெயர் அல்லது நூலின் பொருள் தொடர்புடைய வார்த்தைகளை உள்ளிட்டு வேண்டிய நூல்களைப் பெற முடியும்.

தேடல் முடிவில் நூல்கள் பட்டியலிடப்படும். தேவையான நூலின் மீது இரட்டை கிளிக் செய்தால் அந்நூலானாது PDF BOOK வடிவில் உங்களுடைய கணினியில் தரவிறங்கிவிடும்.

ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவர்கள், பட்டப் படிப்பு மாணவர்கள் என அனைத்து துறைச் சார்ந்த மாணவர்களுக்கும் இத்தளம் மிகவும் பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

தளத்தின் முகவரி: http://bookboon.com/

நன்றி..!

Jeevanandam K

GK updates

1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன?

GSAT-7.

2) ஒரிசாவின் பழைய தலைநகரம் எது?

கட்டாக்.

3) புதுதில்லியின் மெட்ரோ ரயில் சேவை எந்த நாட்டின் உதவியோடு துவக்கப்பட்டது?

ஜப்பான்.

4) விஸ்வநாதன் ஆனந்த் எந்த விளையாட்டோடு சமந்தப்பட்டவர்?

செஸ்.

5) மகாபாரதத்தில் அபிமன்யுவின் தாயாரின் பெயர் என்ன?

சுபத்ரா.

6) இந்தியாவின் தலைநகரமாக தில்லி நடைமுறைக்கு வந்த ஆண்டு?

1911.

7) பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் யார்?

நவாப் ஷரிப்.

8) உத்திரப்பிரதேசத்தின் மாநில விலங்கு எது?

சதுப்பு மான்.

9) ஒலிம்பிக் விளையாட்டுகள் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது?

நான்கு.

10) FIFA உலக கால்பந்து போட்டி 2014 ல் எங்கு நடைபெற உள்ளது?

பிரேசில்.

Thanks n Regards

Jeevanandam K

GK Updates

1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?
அ) எம்.எஸ்.சி., சித்ரா    ஆ) எஸ்.எம்., கங்கா
இ) ஆர்.எம்., யமுனா    ஈ) எம்.எம்., அர்ஜூன்

2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?
அ) உமர் அப்துல்லா    ஆ) லாலு பிரசாத்
இ) சுரேஷ் கல்மாடி    ஈ) கவாஸ்கர்

3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) போட்டோ போபியா    ஆ) சீட்டோ போபியா
இ) மால்டோ போபியா    ஈ) அகஸ்டிகோ போபியா

4. உலகின் சிறிய கடல் எது?
அ) ஆர்டிக் கடல்    ஆ) பசிபிக் கடல்
இ) அன்டார்டிகா கடல்    ஈ) அட்லான்டிக் கடல்

5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?
அ) கிரிக்கெட்    ஆ) கூடைப்பந்து
இ) கால்பந்து    ஈ) செஸ்

6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?
அ) ரவிவர்மா    ஆ) டேவிட் வர்மா
இ) மைக்கல் ஏன்ஜலோ    ஈ) ஆஸ்டின்

7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அ) அல் கொய்தா    ஆ) அல் ஜசீரா
இ) மாவோயிஸ்ட்    ஈ) நக்சலைட்

8. டில்லி முதல்வர் பெயர் என்ன?
அ) ஷீலா தீட்சித்    ஆ) மாயாவதி
இ) நிதிஸ் குமார்    ஈ) மோடி  

9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?
அ) ஜப்பான்    ஆ) நியூசிலாந்து
இ) பிரேசில்    ஈ) பாகிஸ்தான்

10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
அ) கிரிக்கெட்    ஆ) டென்னிஸ்
இ) பாட்மின்டன்    ஈ) கால்பந்து

11. சீனாவின் தலைநகரம் எது?
அ) தாய்லாந்து    ஆ) பீஜிங்
இ) ஹாங்காங்    ஈ) சிட்னி

12. இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?
அ) காவிரி    ஆ) சட்லஜ்
இ) பிரம்மபுத்ரா    ஈ) ரவி

13. பாரதியார் பிறந்த ஊர் எது?
அ) பூம்புகார்    ஆ) மதுரை
இ) எட்டயபுரம்    ஈ) மயிலாப்பூர்

14. கேனிடே குடும்பத்தைச் சேர்ந்த விலங்கு எது?
அ) நரி    ஆ) புலி
இ) சிறுத்தை    ஈ) பூனை

15. தமிழகத்தின் பரப்பளவு?
அ) 130,058 சதுர கி.மீ.,    ஆ) 10,000 சதுர கி.மீ.,
இ) 22,500 சதுர கி.மீ.,     ஈ) 99,338 சதுர கி.மீ.,

விடைகள்: 1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),
                  9(இ), 10(அ),11(ஆ), 12(இ), 13(இ), 14(அ), 15(அ).

Thanks n Regards

Jeevanandam K

தமிழகத்தின் முதன்மைகள்…….

தமிழகத்தின் முதன்மைகள்…….

முதல் குடியரசுத் தலைவர் : டாக்டர். எஸ் ராதாகிருஷ்ணன்

முதல் பெண் நீதிபதி : பத்மினி ஜேசுதுரை…

முதல் பெண் மருத்துவர் : டாக்டர் முத்துலக்ஷ்மி ரெட்டி

முதல் பெண் ஆளுனர் : பாத்திமா பீவி

முதல் பெண் முதலமைச்சர் : ஜானகி ராமச்சந்திரன்

முதல் பெண் தலைமை செயலர் : லட்சுமி பிராணேஷ்

முதல் பெண் கமாண்டோ : காளியம்மாள்

முதல் நாளிதழ் : மதராஸ் மெயில் (1873)

முதல் தமிழ் நாளிதழ் : சுதேசமித்திரன் (1829)

முதல் வானொலி நிலையம் : சென்னை (1930)

முதல் இருப்புப்பாதை : ராயபுரம் – வாலாஜா-(1856)

முதல் வணிக வங்கி : மதராஸ் வங்கி (1831)

முதல் மாநகராட்சி : சென்னை (29-9-1688)

காங்கிரஸ் கட்சியில் தலைவராகப்பதவி வகித்த முதல் தமிழர் : விஜயராகவாச்சாரியார்

சுதந்திரத்திற்குப் பின் காங்கிரஸில்தலைவராக இருந்த முதல் தமிழர் : காமராஜர்.

தமிழகத்தின் முதல் முதலமைச்சர் : அ.சுப்பராயலு ரெட்டியார்

சென்னை மாநகரத்தின் முதல் மேயர் : சர். ராஜா முத்தையா செட்டியார்

சென்னை மாநகரத்தின் முதல்துணை மேயர் : எம்.பக்தவத்சலம்

சென்னை மாநகரத்தின் முதல் பெண் மேயர் : அகல்யா சந்தானம்

சென்னை மாநகரத்தின் முதல் தலைவர் : சர். பி.டி. தியாகராஜர்

உலக சாம்பியனான முதல் தமிழகச் செஸ் வீராங்கனை : ஆர்த்தி ராமசாமி

நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் : சர். சி. வி ராமன்

தமிழகத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் : வசந்தகுமாரி

*****

தமிழகம் முதலிடம்

அரிசி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்.

கரும்பு உற்பத்தியில் உலகிலேயே முதலிடம்.

இந்தியாவில் அரசுப் பேருந்துகள் எண்ணிக்கையில் முதலிடம்.

அணு மின்னாற்றல் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்

ரயில் பெட்டிகள் உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் முதலிடம்

மகளிருக்கான உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவை இந்தியாவில் அமைத்த முதல் மாநிலம்

கணினிக் கல்வியைப் பள்ளிகளில், கல்லூரிகளில் கொண்டுவந்ததில் இந்தியாவிலேயே முதலிடம்.

மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம்

*****

தமிழகத்தின் சிறப்புகள்

உலகத்தின் 2வது நீளமான கடற்கரை : மெரீனா (13 கி.மி)

தமிழகத்தின் நுழைவாயில் : தூத்துக்குடி

தமிழகத்தின் மான்செஸ்டர் : கோயம்பத்தூர்

மிக உயரமான கொடிமரம் : செயின்ட் ஜார்ஜ் கோட்டை(உயரம் 150 அடி)

மிகப்பழமையான அணை : கல்லணை

மிகப்பெரிய அணை : மேட்டூர் அணை

அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் : கன்னியாகுமரி (88.11%)

அதிக மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சென்னை

குறைந்த மக்கள் நெருக்கமுள்ள மாவட்டம் : சிவகங்கை

மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் : கோவை

குறைந்த மக்கள் தொகையுள்ள மாவட்டம் : பெரம்பலூர்

மிக உயரமான கோபுரம் : திருவில்லிபுத்தூர்

மிகப்பெரிய தேர் : திருவாரூர் தேர்

தமிழ்நாட்டின் ஹாலந்து : திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

கோயில் நகரம் : மதுரை

பெயர் மாற்றம்:

சென்னை மாநிலம், தமிழ்நாடு என்று 18-7-1967 சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின்படி மாற்றப்பட்டது.

Thanks n Regards
Jeevanandam K

எளிய பாட்டி வைத்தியம்

எளிய பாட்டி வைத்தியம்:-

 * கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

* நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

* பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

* படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

* நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

* நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

* இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

* மலச்சிக்கலுக்கு இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

* கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

* வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

* கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

Thanks n Regards

Jeevanandam K

GENERAL KNOWLEDGE Q & A

1.      நவாஸ் ஷெரீப்புக்கு எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது?

              25 ஆண்டுகள்
2.      உகாண்டா நாட்டின் தலைநகரம் எது?
                   கம்பாலா
3.      ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் யார்?
              யேசிட்டோ மூரி
4.      உலகிலேயே நதியே இல்லாத நாடு எது?
                சவுதி அரேபியா.
 
Thanks n Regards
Jeevanandam K
5.      சகாரா பாலைவன பரப்பளவு எவ்வளவு?
               84,00,000 சதுர கிலோமீட்டர்
6.      உலகிலேயே வருமான வரியே இல்லாத நாடு?
                          குவைத்
7.      உலகிலேயே நீளமான நதி எது?
                       நைல் நதி (6670 கிலோமீட்டர்)
8.      இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்தவர் யார்?
                              ஜகதாம்பிகாபால் உத்திரபிரதேசம்
9.      ஆஸ்கர் விருது பெற்ற மனிதரல்லாத நபர்?
                               மிக்கி மொஸ்
10.   காங்கிரஸ் கட்சி தலைவராக அதிக முறை தேர்ந்தெடுத்தவர் யார்?
                                நேரு (8 முறை)
11.   உலகில் அதிக பரப்பளவு கொண்ட கடலின் பெயரென்ன?
                                பசிபிக் மகா சமுத்திரம்
12.   உலகிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை எங்குள்ளது?
                                 ரஷ்யா
13.   பாகிஸ்தான் நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?
                               35 சதவீதம்
14.   இங்கிலாந்து நாட்டு ராணியாக இரண்டாம் எலிகபெத் எப்போது பொறுப்பேற்றார்?
                      1952
15.   வாஷிங் மெஷின் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது
    1907 ( ஹோர்லே மெஷன் – அமெரிக்கா)
16.   ரோம் நகரை உருவாக்கியவர்கள் யார்?
                 ரோமூல்ஸ் மற்றும் ரூம்ஸ்
17.   டெலிவிஷன் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
               ஜான் பேர்ட்
18.   உலகிலேயே மிகவும் ஆழமான கடல் எது?
                 பசிபிக் பெருங்கடல்
19.   சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ஆண்டு எடுக்கப்பட்டது?
                 1951
20.   நைலான் இழையை உருவாக்கியவர் யார்?
              வால்ஸ் ஹெச்கராத்தர்
21.   புளூட்டோ கிரகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன?
                டூம்பர்க்
22.   ஆசியாவின் முதல் பெண் இரயில் டிரைவர் யார்?
          சுரேகா யாதவ் (1996)
23.   ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பெண் தலைவராக பொறுப்பேற்று கொண்டவர் யார்?
            விஜயலட்சுமி பண்டித்
24.   ரோம் நகரம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
             ஏப்ரல் 23,    753 கி.மு.
25.   இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கலைக்கபட வேண்டும் என்று பரிந்துரை செய்த தலைவர் யார்?
 
            மகாத்மா காந்தி
1.      இளம் வயதில் மாநில முதல்வரானவர் யார்?
                  பிரஃபுல்லா குமார் மகந்தா (33 வயது) அஸ்ஸாம்

2.      இந்தியாவில் கம்பியூட்டர் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
               1955 கல்கத்தா
3.      அனைத்து தொகுதிகளிலும் மின் அனு வாக்குபதிவு எப்போது எங்கு 
தொடங்கப்பட்டது?
        கோவா (1999)
 
4.      விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆகும் செலவு?
         2 இலட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய்
5.      எந்த ஆண்டு முதல் சதாம் உசேன் ஈராக் அதிபராக இருந்தார்?
                    1979
6.      உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதுன்டா?
                ஒருமுறை கூட வெல்லவில்லை
7.      உலகிலேயே முதன்முதலாக பொது மக்களுக்குகான மின்சார ரயில் எப்போது இயக்கப்பட்டது?
            1880-பெர்லின் (ஜெர்மன்)
8.      இமயமலை ஏறுவதற்கு பயிற்சிதரும் மையம் எந்த நகரில் உள்ளது?
              டார்ஜிலிங்
9.      தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்?
                 
                          கிரிஸ்டோபர் ஷோயஸ் (1867)
 
10.   ரன்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது

                               1934

11.   இந்தியாவிலேயே அதிக நூல்கள் கொண்ட மாநிலம் எது?

                                கேரளா

12.   சென்னை துறைமுகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

                      1905

13.   1999 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் ஒரே ஆட்டத்தில் 5 விக்கட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள்?

      ராபின்சிங் – வெங்கடேஷ்பிரசாத்

14.   டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் எடுத்த வீரர் யார்?

      சுனில் கவாஸ்கர் 34 சதம்

15.   உதகை மலை ரயில் பயணம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

                   1889

16.   முதல் ரன்சிக் கோப்பை வென்ற அணி எது?

              மும்பை அணி

17.   உலக அமைதிக்காக கோபி அன்னன் பெற்ற விருதின் பெயர்     என்ன?
            சியோல் அமைதி விருது
18.   உலகிலேயே கார்களை அதில் அளவில் பயன்படுத்தும் நாடு?

       (அமெரிக்கா) 1,42,956,000

19.   சீனாவிடமிருந்து தைவான் எந்த ஆண்டு தனியாக பிரிந்தது?

                    1949

20.   உலகிலேயே முதன் முதலாக சுரங்கப்பாதை இரயில் எங்கு எப்போது இயக்கப்பட்டது?
              1863 லண்டன்
21.   இந்தியாவிலேயே மிகப்பெரிய சிறை எது?

           திஹார்சிறை டில்லி

22.   சர்க்கரை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் மநாடு எது?

                இந்தியா

23.   1999 ஆம் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய வீரர்கள் யார்?​
                     
  ஜெஃப் அலாட்  மற்றும்  ஷேன்வார்ன் தலா 20 விக்கட்டுகள்
 
24.   சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் யார்?

         ஆர். கே. சண்முகம்

25.   உலக அறிவொளி நாள் என்று கடைப்பிடிக்கபடுகிறது?
  
                 செப்டம்பர் 8

 1. இந்தியாவின் முதல் கடற்படை தளபதியார்?                             ஆர். டி. கட்டாரி (22.4.1958)
 2. புறா மூலம் தபால் அனுப்பும் முறை எப்போது தொடங்கியது?     கி.பி. 12-நூற்றாண்டு
 3. முதன் முதலாக கண்டு பிடிக்கப்பட்ட கம்பியூட்டர் என்ன பெயரில் அழைக்கப்பட்டது?                                                       அனல்டிகல் என்ஜீன்
 4. இந்தியாவிலேயே குறைந்த கிராமங்களை உடைய மாநிலம் எதுசிக்கிம்
 5. உலகிலேயே அதிக வயதில் பணியாற்றி சாதனை படைத்த இந்தியர் யார்?                                                               ஹரிலால் மணியர் (பீகார் – 71 ஆண்டுகள்)
 6. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகார பூர்வ மொழிகள் எத்தனை?     6 மொழிகள்
 7. இந்திய அரசியல் சட்ட மறு ஆய்வுக் குழுவின் தலைவர் யார்?  நீதிபதி. எம். என்.   வெங்கடாசாலய்யா
 8. இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி யார்? சோம்நாத் பண்டிட்(1863 – கல்கத்தா)
 9. இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?                            சர்தார் வல்லபாய் பட்டேல்
 10. நவீன கேமராவை கண்டுபிடித்தவர் யார்?                  ஈஸ்ட்மேன் கோடாக்
 11. சீக்கியர்களின் புனித கோவிலான பொற்கோவிலை கட்டியவர் யார்?                                                                        குரு அர்ஜீன் சிதேல்
 12. உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை எது?          மெரினா கடற்கரை (சென்னை)
 13. இந்தியாவை விட்டு வெளியேற போவதாக ஆங்கிலேய அரசு முதன் முதலில் எப்போது அறிவித்தது. பிப்ரவரி 20 1947
 14. இந்திய விமானம் முதன் முதலில் எப்போது விபத்தக்குள்ளானது?       17.07.1950 (பஞ்சாப்)
 15. இந்தியாவின் முதல் தபால் அலுவலகம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது?                                                            கல்கத்தா (1727)
 16. உலக எழுத்தறிவு நாள் என்று கொண்டாடபடுகிறது?                செப்டம்பர் 8
 17. ரஷ்ய பரட்சி எந்த ஆண்டு நிகழ்ந்தது?                                      1917
 18. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக் கோட்டை நிர்ணயம் செய்தவர் யார்?                                                            லாட் ரெட்கிலிப்
 19. முதல் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர் யார்?                                                                 எஸ். வெங்கட்ராகவன்
 20. இந்தியாவில் தேசிய அறிவியல் மையம் எங்குள்ளது?          புதுடெல்லி
 21. இந்தியாவிலேயே மிகப்பெரிய அருங்காட்சியகம் எங்குள்ளதுகல்கத்தா
 1. மின்சார இரயிலின் முதல் பயணம் இந்தியாவில் எந்த ஆண்டு தொடங்கியது?1925. 
 2. உச்ச நீதிமன்றம் எந்த ஆண்டில் இருந்து செயல்படுகின்றதுஜனவரி.28.1950. 
 3. டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் சதம் அடித்த ஒரே வீரர் யார்ஸ்டிவ் வாக். 
 4. அதிக வயதில் இந்திய ஜனாதிபதியாக பணியாற்றியவர் பதவியேற்றவர் யார்?  ஆர். வெங்கட்ராமன் (1987) 76 வயது.

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்
 
Photo

எளிய இயற்கை வைத்தியம் :- கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்து காய்ச்சி தலைக்குத் தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும். ஆடாதோடா இலைக்கஷாயம் சாப்பிட்டால் உடல் குடைச்சல், வாத பித்த கோளாறுகள் நீங்கும். இலைச்சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு, காமாலை, காய்ச்சல் போன்றவையும் நீங்கும். உடல் சூட்டாலோ, கண்ணில் அடிபட்டதாலோ கண் சிவந்து விடுவது உண்டு. இதை குணப்படுத்த புளியம் பூவை அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டுவந்தால் கண்கள் சிவப்பது சரியாகும். வெள்ளைப் பூண்டை நைத்து அதன் சாறு உடலில் ஊறும்வரை படையின் மீது போட்டு நன்றாகத் தேய்க்க வேண்டும். தினமும் காலை மாலை படை உள்ள இடத்தை சோப்பு போட்டு கழுவிய பின் இந்த விதமாக தேய்த்து வர ஆறே நாளில் படை நீங்கும். அசோக மரத்தின் உட்பட்டையையும், அத்தி மரத்தின் உட்பட்டையையும் கொண்டுவந்து ஒரு சட்டியில் போட்டு ஒரு குவளை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிகட்டி அரை குவளை வீதம் எடுத்து சர்க்கரைச் சேர்த்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து ஏழு நாட்கள் கொடுத்து வந்தால் வெள்ளைப்படுதல் நீங்கும். சுத்தம் செய்த ஓமத்தை இளவறுவலாக வறுத்து உமி மற்றும் கசடு நீக்கி வெல்லம், தேன் கலந்து அம்மியில் அரைத்து காலை மாலை இருவேளை சாப்பிட வயிற்றுப்போக்குநீங்கும். ஆசனக்கடுப்பு, குளிர்க்காய்ச்சல், வயிறு இரைச்சல், இருமல், செரியாமை ஆகியவற்றுக்கு ஓமம் அருமருந்தாகும். திடீரென காயம் ஏற்பட்டால் அரை தேக்கரண்டி சர்க்கரையில் சிறிது சுண்ணாம்பு கலந்து தண்ணீர் தெளித்து குழப்பி ரத்தம் கொட்டும் இடத்தில் தடவ ரத்தப் போக்கு நிற்கும். காயமும் சீக்கிரம் ஆறும். வாய்வுக் கோளாறு காரணமாக இடுப்பு வலி இருந்தால், சுடுசோறு ஒரு கை அளவு எடுத்து மெல்லிய வெள்ளை துணியில் வைத்து வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும். மாமரத்துப் பிசினை ஒரு சிறு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். இதை இரவு படுக்கப்போகும் முன் காலிலுள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் சில நாட்களில் பித்த வெடிப்பு சரியாகும். கசகசாவை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து அடிக்கடி தடவி வந்தால் சில தினங்களில் உடல் சருமத்தில் தோன்றும் கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும். வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது. கருப்பாக, பளபளப்பாக இருக்கும். மருதோன்றி இலையை அரைத்து தலையில் ஒரு மணி நேரம் கட்டி வைத்து பின் தலை முழுகினால் கண் சிவப்பு நீங்கும். பல் கூச்சம் விலக வேண்டுமா? கொய்யா இலையை மென்று வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும். காதில் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டால் தண்ணீரில் உப்பைக் கரைத்து காதில் ஊற்ற அவை வெளியேறும். கண் வலிக்கு நந்தியாவட்டைப் பூவை கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தூதுவேளை வேரையும் அருகம் புல்லையும் கசக்கி துணியில் வைத்து பல்வலி இடது புறமிருந்தால் வலது காதிலும், வலது புறமிருந்தால் இடது காதிலும் மூன்று சொட்டுக்கள் மட்டும் பிழிய வலி உடனே நிற்கும். பல் வலியா? புதினா இலைகளை வெயிலில் காயவைத்துப் பொடி செய்து கால் பங்கு உப்பு சேர்த்துப்பல் துலக்கவும். பச்சை வாழைப் பழத்தை உண்ண விக்கல் விலகும்.
By: Jeevanandam K