ஓடும் பஸ்சில் கண்டக்டரை, செருப்பால் அடித்த பெண் பயணி

ஓடும் பஸ்சில் கண்டக்டரை, செருப்பால் அடித்த பெண் பயணி: போலீசார் விசாரணை

ஓடும் பஸ்சில் கண்டக்டரை, செருப்பால் அடித்த பெண் பயணி: போலீசார் விசாரணை

சென்னை, ஜன.25-

idha ippadiyae vida koodadhu.. andha lady mela thappu irrundha kadumaiya thandikanum. Illaiyendral next indha news a padikira matra sila ladiessum ippadi panna vaaipu erpadum. Enna dhairiyam !! oru Gens endru parkamal serupal adippadha ?. Idhaiye Gens yaaravadu seidhu irundhal…

சென்னை பம்மல், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 37). நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, பிராட்வே சென்ற மாநகர பஸ்சில் இவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் மூர்த்திக்கும் (40), ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனாம்பேட்டை வானவில் பஸ் நிறுத்தத்தில், ஒரு பயணி பஸ்சை நிறுத்த சொன்னார். ஆனால் கண்டக்டர் மூர்த்தி, அங்கு பஸ்சை நிறுத்தமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதை ராதிகா தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டு விட்டது. இதனால் மூர்த்தி, பஸ்சை அண்ணாசாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு போய் நிறுத்தினார்.

ராதிகா தன்னை செருப்பால் அடித்து அவமானப்படுத்திவிட்டதாக, அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் கொடுத்தார். ராதிகாவும், அதே போலீஸ் நிலையத்தில், மூர்த்தி மீது பதிலடி புகார் கொடுத்தார். தன்னை பெண் என்று கூட பார்க்காமல், தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தினார் என்று ராதிகா குற்றம் சாட்டினார்.

இருதரப்பு புகார் மனுக்களையும் பெற்றுக்கொண்ட அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விசாரணை நடத்தி வருகிறார். ராதிகாவின் கணவரும், பஸ் கண்டக்டர் என்பதால், இருதரப்பினரும் புகாரை வாபஸ்பெறும் வாய்ப்பு உள்ளதாக போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.

Thanks n Regards

Jeevanandam K

நாடு முழுவதும் ATM. மையங்களை அமைக்கிறது இந்திய தபால் துறை

நாடு முழுவதும் ATM. மையங்களை அமைக்கிறது இந்திய தபால் துறை

இந்தியா முழுவதும் 3,000 ஏ.டி.எம். மையங்களையும், 1.35 லட்சம் மைக்ரோ ஏ.டி.எம். மையங்களையும் அமைக்க இந்தியா தபால் துறை முடிவு செய்துள்ளது.

தபால் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏ.டி.எம் மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எழும்பூரில் வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை, உதடு கிழிந்தது

எழும்பூரில் வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை, உதடு கிழிந்தது
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜனவரி 22, 4:15 AM IST

எழும்பூரில் வாகன சோதனையின் போது சப்–இன்ஸ்பெக்டருக்கு அடி–உதை, உதடு கிழிந்தது

சென்னை, ஜன. 22-

சென்னை எழும்பூர், ஆல்பர்ட் தியேட்டர் சந்திப்பில் நேற்று இரவு 10.30 மணி அளவில் சப்–இன்ஸ்பெக்டர் கிளிக்கண்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஸ்கூட்டரில் வந்த நபருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கிளிக்கண்ணன் தாக்கப்பட்டார். அதில் அவரது உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன், உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஸ்கூட்டரில் வந்த நபர், சப்–இன்ஸ்பெக்டர், தன்னை தரக்குறைவாக பேசியதாக புகார் கூறினார.

* உடல் எடை கூட:-

 உடல் எடை கூட:

பூசணிக்காய் பருப்பை எடுத்து காய வைத்து பின் பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

Thanks n Regards

Jeevanandam K

அடிக்கடி சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் பிரியாணி சாப்பிடறவங்களா நீங்க..

 சிக்கன் பிரியாணி… அடிக்கடி சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் பிரியாணி சாப்பிடறவங்களா நீங்க.. இந்த அதிர்ச்சியான தகவலையும் படிங்க.. கறிக்கோழி (பிராய்லர் கோழி)சாப்பிடும் சிறுவர்களுக்கு மார்பு வீக்க நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என சமீபத்தில் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுத்தேவையும் அதிகரித்து வருகிறது.

இதனை சமாளிக்க விஞ்ஞானத்தின் பெயரால், இயற்கையை மீறி பல்வேறு வழிமுறைகளில் உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் ஒன்றுதான் பிராய்லர் கோழி எனப்படும் கறிக்கோழி. இந்த கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வேகமாக வளர்வதற்காக கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசி, செல்களை வேகமாக வளரவைத்து கோழியின் எடையை அதிகமாக்குகிறது.

பண்ணை வைத்துள்ள ஒரு சிலர் குறுகிய லாப நோக்கத்தோடு ஈஸ்ட்ரோஜென் மருந்துகளை கோழிகளுக்கு அதிகளவில் கொடுத்து விடுகின்றனர். இதனால் பிராய்லர் கோழிக்கறி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக ‘பகீர்’ தகவல்கள் வெளியாகி உள்ளன. நாம் காலையில் எழுந்து, இரவு தூங்கும் வரை செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மனித உடலில் இன்சுலின், பிட்யூட்டரி, ஈஸ்ட்ரோஜென், புரஜ்சக்ஸ்ட்ரான் என 30க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியமான வேலையை செய்துவருகிறது.

இவை அனைத்தும் மனித உடலில் தேவையான அளவு இருந்தே ஆக வேண்டும். ஏதேனும் ஒரு ஹார்மோன் சுரக்காமல் குறைந்தாலோ அல்லது தேவையை விட அதிமானாலோ உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இவற்றில் புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் ஆண்களுக்கும், ஈஸ்ட்ரோ ஜென் பெண்களுக்கும் 2ம் நிலை பால் வேறுபாட்டை பிரிக்கிறது. அதாவது இருபாலருக்கும் உடல் உறுப்புகளில் மாற்றங்களையும், உணர்வு களையும் ஏற்படுத்துகிறது. புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிகம் சுரந்தால் முகத்தில் முடி வளர்வது உள்ளிட்ட பிரச்னைகளும், ஈஸ்ட்ரோஜென் ஆண்களுக்கு அதிகம் சுரந்தால் கைனக்கோமாஸ்ட்ரோ எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகிறது.

கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றது. “உணவுப்பொருட்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் சமைத்த பின்னரும் உணவில் கலந்தே இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈஸ்ட்ரோஜென் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்பெய்தல், கர்ப்பப்பை புற்று நோய், உடல் பருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது கைனக்கோ மாஸ்ட்ரோ எனப்படும் மார்பக வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மார்பில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும்.

அதேபோல் ஆண்களிடம் பெண் தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே ஈஸ்ட்ரோஜென் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொள்வது நல்லது! ஈஸ்ட்ரோஜன் மருந்துகள் அதிகம் கொடுத்து வளர்க்கும் பிராய்லர் கோழிக்கறிகள் உடலுக்கு ஆபத்தினை விளைவிப்பவை. எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.. இணையத்தில் கிடைத்த செய்தி.. சிக்கன் பிரியாணி… அடிக்கடி சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் பிரியாணி சாப்பிடறவங்களா நீங்க.. இந்த அதிர்ச்சியான தகவலையும் படிங்க.. கறிக்கோழி (பிராய்லர் கோழி)சாப்பிடும் சிறுவர்களுக்கு மார்பு வீக்க நோய் ஏற்படும் அபாயம் உள்ளது என சமீபத்தில் டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப உணவுத்தேவையும் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க விஞ்ஞானத்தின் பெயரால், இயற்கையை மீறி பல்வேறு வழிமுறைகளில் உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. அவற்றில் ஒன்றுதான் பிராய்லர் கோழி எனப்படும் கறிக்கோழி. இந்த கோழிகள் கறிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வேகமாக வளர்வதற்காக கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் ஊசி போடப்படுகிறது. இந்த ஈஸ்ட்ரோஜென் ஊசி, செல்களை வேகமாக வளரவைத்து கோழியின் எடையை அதிகமாக்குகிறது. பண்ணை வைத்துள்ள ஒரு சிலர் குறுகிய லாப நோக்கத்தோடு ஈஸ்ட்ரோஜென் மருந்துகளை கோழிகளுக்கு அதிகளவில் கொடுத்து விடுகின்றனர்.

இதனால் பிராய்லர் கோழிக்கறி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக ‘பகீர்’ தகவல்கள் வெளியாகி உள்ளன. நாம் காலையில் எழுந்து, இரவு தூங்கும் வரை செய்யும் ஒவ்வொரு வேலையிலும் ஹார்மோன்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மனித உடலில் இன்சுலின், பிட்யூட்டரி, ஈஸ்ட்ரோஜென், புரஜ்சக்ஸ்ட்ரான் என 30க்கும் மேற்பட்ட ஹார்மோன்கள் சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக்கியமான வேலையை செய்துவருகிறது. இவை அனைத்தும் மனித உடலில் தேவையான அளவு இருந்தே ஆக வேண்டும்.

ஏதேனும் ஒரு ஹார்மோன் சுரக்காமல் குறைந்தாலோ அல்லது தேவையை விட அதிமானாலோ உடலில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இவற்றில் புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் ஆண்களுக்கும், ஈஸ்ட்ரோ ஜென் பெண்களுக்கும் 2ம் நிலை பால் வேறுபாட்டை பிரிக்கிறது. அதாவது இருபாலருக்கும் உடல் உறுப்புகளில் மாற்றங்களையும், உணர்வு களையும் ஏற்படுத்துகிறது. புரஜ்சக்ஸ்ட்ரான் ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிகம் சுரந்தால் முகத்தில் முடி வளர்வது உள்ளிட்ட பிரச்னைகளும், ஈஸ்ட்ரோஜென் ஆண்களுக்கு அதிகம் சுரந்தால் கைனக்கோமாஸ்ட்ரோ எனப்படும் மார்பு வீக்க நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உண்டாகிறது. கறிக்கோழிகளில் போடப்படும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்கள் சமைத்த பின்னரும் நிலைமாற்றமில்லாமல் உடலுக்குள் செல்வதால், இருபாலருக்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றது.

“உணவுப்பொருட்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் சமைத்த பின்னரும் உணவில் கலந்தே இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஈஸ்ட்ரோஜென் உடலில் தேவையை விட அதிகரிக்கும் போது பெண் குழந்தைகள் சிறுவயதில் பூப்பெய்தல், கர்ப்பப்பை புற்று நோய், உடல் பருத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஈஸ்ட்ரோ ஜென் ஹார்மோன்கள் அதிகரிக்கும் போது கைனக்கோ மாஸ்ட்ரோ எனப்படும் மார்பக வீக்கநோய் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மார்பில் வீக்கம் ஏற்பட்டு வலி ஏற்படும்.

அதேபோல் ஆண்களிடம் பெண் தன்மை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே ஈஸ்ட்ரோஜென் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களை குறைத்துக்கொள்வது நல்லது! ஈஸ்ட்ரோஜன் மருந்துகள் அதிகம் கொடுத்து வளர்க்கும் பிராய்லர் கோழிக்கறிகள் உடலுக்கு ஆபத்தினை விளைவிப்பவை. எனவே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.. இணையத்தில் கிடைத்த செய்தி.

Thanks n Regards

Jeevanandam K

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடைகளில் விற்பனை செய்யும் இட்லி தோசை மாவு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்..!

கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.மேலும் சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.

இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – ஸ்லோ பாய்ஸன் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதில்லை.இதன் பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால் நம் உதிரமும் உறைந்து போகும் அளவிற்கு அதிபயங்கரமான விளைவுகள் தெரிய வருகின்றது!

1. 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

2. அதாவது ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது. இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

3. என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை ஊற்றி தான் மாவு அரைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரே பயன்படுத்தப்படுகின்றது.

4. நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கையான நோய் நிவாரணி( ஆண்டி பயாடிக்) இது, உடம்பு உஷ்னம், வாய் நாற்றம், குடல் புண்(அல்சர்) போன்ற நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!

மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.

எனவே தாம் சென்னை மாநகராட்சி கடைகள்,மற்றும் மாவுஅரைக்கும் இடங்களில் பரவலாக சோதனை (ரெய்டு) நடத்தி தரம் குன்றிய மாவுகளைக் கைப்பற்றி,அபராதமும் விதித்து வருகின்றது.

எனவே,நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாத நேர்மையானவர்கள் அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குவதோடு,முன்,பின் தெரியாதவர்கள் தயாரித்து கடைகளில் விற்கும் மாவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது நலம்!

15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு

வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர்.

கடந்த 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

Thanks n Regards

Jeevanandam K

அமாவாசையன்று வாசலில் கோலம் போடக் கூடாது?

ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு திதி விசேஷமானது. சதுர்த்தி-விநாயகருக்கு சஷ்டி-முருகனுக்கு, ஏகாதசி-மகாவிஷ்ணுவுக்கு. அஷ்டமி-பைரவருக்கு, சதுர்த்தசி-சிவனுக்கு. பவுர்ணமி-அம்மனுக்கு… இதைப் போலவே, மறைந்த

Temple images

முன்னோர்களுக்கு(பித்ருக்களுக்கு) என்று ஒரு திதி, அதுதான் அமாவாசை. ஆகவே தான், அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும் தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். இவ்வாறு நம் முன்னோர்களை நம் இருப்பிடத்துக்கு வரவழைத்து, அவர்களின் பசி தாகம் தீர எள்ளு கலந்த ஜலத்தால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் நம் இருப்பிடம் வந்து நாம் தரும் எள்ளு கலந்த ஜலத்தை ஏற்றுக்கொண்டு பசி, தாகத்தை தணித்துக்கொள்கிறார்கள். அவ்வாறு தர்ப்பணம் செய்யும் நாளன்று, அதாவது அமாவாசையன்று, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும் அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்புப் பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையைத் தடுப்பதாக அமையும் என்பதால். இவை பித்ருக்களுக்குப் பிடிக்காது. ஆகவே அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்துசெல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும்(தெய்வங்களுக்குப் பூஜை செய்வதையும்) தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆகவேதான், அமாவாசையன்று முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர். வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.

Thanks n Regards

Jeevanandam K

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?

எந்த தெய்வத்துக்கு எத்தனை சுற்று?
 
Temple images

*விநாயகரை மட்டும் ஒரே ஒரு தடவை சுற்றி விட்டு செல்ல அனுமதியுண்டு.
*சூரியனை வணங்கும் போது, நம்மை நாமே இரண்டு முறை சுற்றிக் கொள்ள வேண்டும்.
*சிவன் கோயிலில் மூன்று முறை சுற்ற வேண்டும்.
*பெருமாள் கோயிலில் நான்கு முறை வலம் வர வேண்டும்.
*பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதி, சிவாலயத்திலுள்ள அம்மன் சந்நிதி அல்லது அம்மன், தாயார் தனிக்கோயில்களில் ஐந்துமுறை சுற்ற வேண்டும்.
*அரசமரம் வலம் வரும் போது, ஏழுதடவைக்கு குறையாமல் சுற்ற வேண்டும். அரசமர வலம் பகல் நேரத்தில் மட்டுமே பொருந்தும்.

Thanks n Regards
Jeevanandam K

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபடுவது ஏன்?

Temple images

பசுவிற்கு அகத்திக்கீரை, பழம் கொடுத்து வழிபட்டால் நம் பாவம் தீரும் என்பது ஐதீகம். இதற்குரிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தால் இன்னும் சிறப்பு.ஸர்வ காம துகே தேவி ஸர்வ தீர்த்தாபிசோசினிபாவனே ஸுரபி ஸ்ரேஷ்டேதேவி துப்யம் நமோஸ்துதே!எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்பவளே! எல்லா தீர்த்தங்களாலும் அபிஷேகம் செய்யப்படுபவளே! மங்கல வடிவானவளே! பெருமைக்குரிய காமதேனுவே! உன்னை வணங்குகிறேன் என்பது இதன் பொருள்.  இதைச் சொல்லி பசுவை வழிபட்டால், முன்னோர் சாபம், குடும்ப சாபம் தீரும். பிதுர் ஆசி பூரணமாக கிடைக்கும். குடும்பத்தில் தடைபட்ட சுபவிஷயங்கள் விரைவில் நடந்தேறும்.

Thanks n Regards
Jeevanandam K