சென்னை, ஜன.25-
idha ippadiyae vida koodadhu.. andha lady mela thappu irrundha kadumaiya thandikanum. Illaiyendral next indha news a padikira matra sila ladiessum ippadi panna vaaipu erpadum. Enna dhairiyam !! oru Gens endru parkamal serupal adippadha ?. Idhaiye Gens yaaravadu seidhu irundhal…
சென்னை பம்மல், குருசாமி நகரைச் சேர்ந்தவர் ராதிகா (வயது 37). நேற்று முன்தினம் இரவு, தாம்பரத்தில் இருந்து, பிராட்வே சென்ற மாநகர பஸ்சில் இவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பஸ்சின் கண்டக்டர் மூர்த்திக்கும் (40), ராதிகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தேனாம்பேட்டை வானவில் பஸ் நிறுத்தத்தில், ஒரு பயணி பஸ்சை நிறுத்த சொன்னார். ஆனால் கண்டக்டர் மூர்த்தி, அங்கு பஸ்சை நிறுத்தமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதை ராதிகா தட்டிக்கேட்டதால் மோதல் ஏற்பட்டு விட்டது. இதனால் மூர்த்தி, பஸ்சை அண்ணாசாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு போய் நிறுத்தினார்.
ராதிகா தன்னை செருப்பால் அடித்து அவமானப்படுத்திவிட்டதாக, அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் மூர்த்தி புகார் கொடுத்தார். ராதிகாவும், அதே போலீஸ் நிலையத்தில், மூர்த்தி மீது பதிலடி புகார் கொடுத்தார். தன்னை பெண் என்று கூட பார்க்காமல், தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, அவமானப்படுத்தினார் என்று ராதிகா குற்றம் சாட்டினார்.
இருதரப்பு புகார் மனுக்களையும் பெற்றுக்கொண்ட அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், விசாரணை நடத்தி வருகிறார். ராதிகாவின் கணவரும், பஸ் கண்டக்டர் என்பதால், இருதரப்பினரும் புகாரை வாபஸ்பெறும் வாய்ப்பு உள்ளதாக போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.
Thanks n Regards
Jeevanandam K