நோய் தீர்க்கும் அதிசய தீர்த்தம்! – இது கம்பம் அருகில் உள்ளது


நோய் தீர்க்கும் அதிசய தீர்த்தம்! – இது கம்பம் அருகில் உள்ளது
     
Temple images

முருகனின் திருக்கோயில்களில் ஒன்று சுருளிமலை. இது கம்பம் அருகில் உள்ளது. இம்மலைக்கு சுருளிப்பட்டியிலிருந்து செல்ல வேண்டும். சுருளிமலையிலிருந்து ஏராளமான மூலிகைகளுடன் கலந்து அருவியாக விழும் இந்த சுருளி தீர்த்தத்தில் நீராடினால் பல நோய்கள் குணமாகின்றனவாம். கோவைக்கு வட கிழக்கே 42 கி.மீ. தூரத்தில் ஆலத்தூர் என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு மேற்கே உள்ள குளத்தில் நீராடி பயபக்தியுடன் துளசி, வேப்பங்கொழுந்து, மாங்கொழுந்து, அரளிப்பூ, எலுமிச்சம்பழச்சாறு முதலான பொருட்களைச் சேர்த்து தீமூட்டுகிறார்கள். அதிலிருந்து வரும் புகையை பிடிக்கிறார்கள். அதில் கிடைக்கும் கரித்தூளை சொரி சிரங்குகளின் மீது பூசுகிறார்கள். இதனால் தோல் நோய்கள் குணமாகின்றன.

Thanks n Regards

Jeevanandam K

தக்காளி கோதுமை தோசை


 

தக்காளி கோதுமை தோசை
 
தக்காளி கோதுமை தோசை

 

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சீரகம் –  அரை ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

• தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

• பின்னர் ப.மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

• நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில்  அரைத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் உப்பு, தக்காளி வெங்காய கலவை, சீரகம், கொத்தமல்லி போட்டு தோவை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

• அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

 

Thanks n Regards

Jeevanandam K

முடி உதிர்வதை தடுக்க எளிய முறைகள்


முடி உதிர்வதை தடுக்க எளிய முறைகள்

* வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

• பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

* மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

* கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும்.

Thanks n Regards

Jeevanandam K

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்:


 

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள்:

1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.

2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.

3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.

4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.

6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.

8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.

9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.

10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.

 

Thanks n Regards

Jeevanandam K

வளமெலாம் அளிக்கும் வைகுண்ட ஏகாதசி


வளமெலாம் அளிக்கும் வைகுண்ட ஏகாதசி
 
வளமெலாம் அளிக்கும் வைகுண்ட ஏகாதசி

 
பெருமாள் பக்தர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மிகச் சிறந்த வழிபாடு, வைகுண்ட ஏகாதசி அன்று நடைபெறுகிறது.

மனிதப் பிறவியின் பயனே, மறுமையில் மோட்சம் அடைவதுதான் என்ற தத்துவத்தின் ஒத்திகை அந்த நாளில் நடைபெறுகிறது. மோட்சத்துக்கு எப்படிப் போவது? இப்பிறவியில் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காது வாழ்ந்தால் போகலாம். சரி, யார் அழைத்துப் போவார், நம்மை? அந்த பரந்தாமனேதான். அவ்வாறு பரந்தாமன் அழைத்துப் போகும் அந்த சம்பவம்தான் இப்போது ஒரு ஒத்திகையாக ஒவ்வொரு வைகுண்ட ஏகாதசி தினத்தன்றும் நடத்தப்படுகிறது.

அதாவது சொர்க்க வாசல் திறக்க, அதனுள் முதலில் பெருமாள் புக, பின்னால், அவர் அழைத்துவரும் அத்தனை பக்தர்களும் புகும் புண்ணிய வைபவம். பொதுவாக எல்லா பெருமாள் கோயில்களிலும் இந்த உற்சவம் விமரிசையாக நடந்தேறும் என்றாலும், ஸ்ரீரங்கம், திருப்பதி, சென்னை திருவல்லிக்கேணி போன்ற தலங்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை.

இங்கே ஸ்ரீரங்கத்து வைகுண்ட ஏகாதசி உற்சவ காட்சிகளைக் காணலாம். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக மார்கழி பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைப்பர்.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த பத்து நாட்கள் உற்சவம் ராப்பத்து உற்சவம் என அழைக்கப்படுகிறது. அப்போது அரங்கனுக்கு நாச்சியார் திருக்கோல அலங்காரம் செய்யப்படுகிறது. பகல்பத்துக்கு முதல் நாள் இரவு திருமங்கையாழ்வாரால் அருளப்பட்ட திருநெடுந்தாண்டகம், அரங்கன் முன் பாடப்படுகிறது.

இந்த உற்சவ நாட்களில் திருமால் அர்ஜுன மண்டபத்திற்கு எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி சேவையை ஏற்பார். பெருமாளை சுமக்கும் பாக்கியம் பெற்ற ஸ்ரீபாதம் தாங்கிகள் ஒரே மாதிரியான தலைப்பாகையைக் கட்டியிருப்பது கண்களைக் கவரும். சன்னதி திரும்பும்போது ஒய்யாளி சேவையில் சர்பகதி எனும் பெருமாளைக் கீழே தாழ்த்தி அதன் பின் மேலே உயர்த்தி பாம்பு போல் செய்வது கண்களுக்கு விருந்தாகும். தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் இருமுறை அரையர் சேவை நடக்கும்.

நாலாயிர திவ்யபிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்து. அரங்கன் சொர்க்க வாசல் கதவுக்கு நேர் எதிரே வந்து நின்றதும், பட்டர், ‘திற’ என குரல் கொடுக்க, பரமபதவாசலில் பக்தர்களோடு அந்த பக்தவத்சலனும் நுழைவான். அப்போது ‘ரங்கா! ரங்கா!’ கோஷம் விண்ணை முட்டும். ஏகாதசியன்றும், அதையடுத்த தினங்களிலும், முத்தினாலான முத்தங்கியை தரித்திருக்கும் மூலவரை கருவறையில் தரிசிக்கலாம்.

ஆடி ஏகாதசி பண்டரிபுரத்திலும், கைசிக ஏகாதசி திருக்குறுங்குடியிலும், விருச்சிக ஏகாதசி குருவாயூரிலும், வைகுண்ட ஏகாதசி ஸ்ரீரங்கத்திலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மார்கழி மாதம் இருபது நாட்கள் திருவிழா விசேஷமாக நடைபெறுகிறது. பகல் பத்து என பத்து நாட்களும், ராப்பத்து என பத்து நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.

இந்த முதல் பத்து தினங்களில் மூலவர் சன்னதியிலிருந்து நம்பெருமாள் கீழ் நிலைக்கு இறங்கி வந்து நமக்காக யோகத்தைச் செய்து காண்பிக்கிறார். சமாதி நிலையைக் கலைத்து இடை நிலையைக் கலைத்து, இடகலை, பிங்கலை வழியாக சந்திர கலை, சூர்யகலை, மும்மலங்கள் போன்றவற்றைக் கடந்து ஆறு ஆதாரங்களையும் கடந்து அர்ச்சுன மண்டபத்திற்குச் செல்கிறார். இங்கே யோகத்தை அப்பத்து நாட்களும் செய்த பின் பத்தாவது நாள் மோகினித் திருக்கோலம் கொள்கிறார். இதன் தத்துவம் குண்டலினி சக்தி புறப்பட்டு விட்டது என்பதை நமக்கு உணர்த்துவதாகும்.

பத்தாம் நாள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இது பிரம்மந்திரம் திறப்பதைக் குறிப்பதாகும். பிரம்மநிலை என்பது ஆயிரங்கால் மண்டபம். அந்த இடமே ஜெகஜ்ஜோதியாய் திகழும். யோகாக்னி அதிகமாவதால் நல்ல ஆகாரம் வேண்டும். அதனால் பெருமாளுக்கு 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது.

சராசரி உடல் ஆரோக்கியம் கொண்ட ஒருவர் ஒரே வேளையில் விதவிதமான உணவு வகைகளை உண்ணமுடியாது. ஆனால், யோகிகளால் முடியும். எனவேதான் ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசிவடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும். அன்று நம் பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார். அது வாசியின் ஓட்டத்தைக் குறிக்கும். குதிரை என்பது மனது. குதிரைபோல மனதும் கட்டுக்கடங்காது முன்னும் பின்னும் ஓடும். அதை நினைவுறுத்த குதிரை வாகனம் முன்னும் பின்னும் வேகமாக ஆடும்போது அதில் ஆரோகணித்திருக்கும் அரங்கனைக் காணக் கண் கோடி வேண்டும்.

ராப்பத்து உற்சவத்தில் பரமபதவாசலைக்கடந்து திருமாமணி மண்டபத்தைச் சேர்வது ஜீவாத்மா சரீரத்தை விட்டு வைகுண்டத்தை அடைவதன் சாட்சியாகக் கருதப்படுகிறது. யோகத்தில் உள்ள சர்ப்பகதி, வியாக்ரகதி, கஜகதி, விருஷபகதி, சிம்ம கதி எனும் ஐந்து கதிகளிலும் பெருமாளின் ஓய்யாளி சேவை நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசித் திருநாளில், ஒரு சொட்டு நீர்கூடப் பருகாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர். (ஒரு வருடத்தின் எல்லா ஏகாதசி நாட்களிலும் இவ்வாறு விரதம் இருப்பதும் அவர்கள் வழக்கம்). அன்று முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று அந்த நிறைவிலேயே தம் உண்ணா நோன்பை முடித்துக் கொள்வார்கள். வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் திருவரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் இகபரசுகம் நிச்சயம்.

 
Thanks n Regards
Jeevanandam K

தேனின் மருத்துவம் குணங்கள்.!


தேனின் மருத்துவம் குணங்கள்.!
——————————————–

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

 

Thanks n Regards

Jeevanandam K

பார்லர் போறீங்களா?


 

பார்லர் போறீங்களா?

அழகுக்கு அழகு சேர்ப்போம் டாக்டரிடமும் வக்கீலிடமும் எதையும் மறைக்கக் கூடாது என்கிற மாதிரி, உங்கள் பியூட்டீஷியனிடமும் மறைக்காதீர்கள்! பார்லர் போவதற்கு முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ‘கிளையன்ட் கன்சல்ட்டேஷன்’ எனப்படுகிற வாடிக்கையாளர் ஆலோசனை மிகவும் முக்கியம். உங்கள் பியூட்டீஷியனிடம் பேசித் தெரிந்து கொள்ள வேண்டிய அவற்றைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா. முதலில் அழகுக்கலை நிபுணரிடம் ஆலோசனைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்குங்கள். உங்களுடைய சருமம், கூந்தல் போன்றவற்றின் தன்மையை அழகுக்கலை நிபுணரால்தான் சரியாகக் கணிக்க முடியும். சருமத்துக்கான சிகிச்சை எடுக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் சருமத்துக்கான டெஸ்ட் முக்கியம். அதற்கென இப்போது பிரத்தியேக கருவிகள் வருகின்றன. உட் லேம்ப் வைத்தது, மாயிச்சரைசர் டிடெக்டர் என அதில் நிறைய வகைகள் உள்ளன. இது எதுவுமே

 

இல்லாதபட்சத்தில், சாதாரண டிஷ்யூ பேப்பரை வைத்தாவது உங்கள் சருமத்தின் தன்மையை பியூட்டீஷியன் கண்டுபிடிப்பார். அதே மாதிரிதான் கூந்தல் பிரச்னைகளைக் கண்டறியும் ஹேர் ஸ்கேனர்… பொடுகு உள்பட உங்கள் கூந்தலில் உள்ள எல்லாப் பிரச்னைகளையும் இந்த ஸ்கேனர் காட்டிக் கொடுத்து விடும். எதையும் மறைக்காதீர்கள்! அழகு சிகிச்சைகளும் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவைதான். உதாரணத்துக்கு உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி இருந்தால், அதை மறைக்காமல் சொல்லுங்கள். கர்ப்பமாக இருப்பதைக்கூட சில பெண்கள் மறைக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும்போது, சில வகை சிகிச்சை களை செய்யக்கூடாது. சாய்ந்த நிலையில் உட்கார வைத்தும், எந்திரங்கள் உபயோகிக்காமலும், கெமிக்கல் அல்லாததுமான சிகிச்சைகளைத்தான் செய்வோம். நீரிழிவுக்காரர்கள், பிபி அதிகம் உள்ளவர்கள், நரம்புக்கோளாறு உள்ளவர்கள், வாய்க்குள்ளேயோ, உடலின் வேறு பகுதிகளிலோ (பேஸ் மேக்கர் மாதிரி) உலோகங்கள் பொருத்தியிருந்தாலும், அதைச் சொல்ல வேண்டும். நரம்புக்கோளாறு உள்ளவர்களுக்கு அரோமா தெரபி செய்யக்கூடாது. நீரிழிவு உள்ளவர்களுக்கு உலோகங்களைப் பயன்படுத்தக் கூடாது. பார்லரில் கவனிக்க வேண்டியவை… முதல் விஷயம் சுத்தமும் சுகாதாரமும். ஃபேஷியல் ஹெட் பேன்ட், முகம் துடைக்கிற டிஷ்யூ, ஃபேஷியல் டிரெஸ், ஸ்பா காலணி என இப்போது எல்லாமே டிஸ்போசபிள்தான். வாக்சிங் செய்யக்கூட வாக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் எனப்படுகிற டிஸ்போசபிள் பட்டைகளைத் தான் உபயோகிக்கிறார்கள். அப்போதுதான் ஒருவரிடமிருந்து இன் னொரு வருக்கு இன்ஃபெக்ஷன் வராமலிருக்கும். நீங்கள் செல்கிற பார்லரில் இவற்றையெல்லாம் பின்பற்றுகிறார்களா எனப்பாருங்கள். பெடிக்யூர், மெனிக்யூர் உள்ளிட்ட கருவிகள் அனைத்தும் முறையாக ஸ்டெரிலைஸ் செய்யப்படுகின்றனவா என்றும் பாருங்கள். உங்களுக்கு உபயோகிக்கிற கருவிகள் அப்படி ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டவையா எனக் கேட்பது உங்கள் உரிமை. ஒருவருக்கு உபயோகிக்கிற சீப்பு மற்றும் பிரஷ்ஷை முறையாக சுத்தப்படுத்தாமல் அடுத்தவருக்கு உபயோகிக்கக் கூடாது. பார்லர்களில் உங்களுக்குப் பயன்படுத்துகிற டவல்கள் சுத்தமாக, துவைத்து மடிக்கப்பட்டு, உலர்ந்த நிலையில் உள்ளனவா எனப் பாருங்கள். ஈரத் துணிகளின் மூலம் கிருமித் தொற்று வேகமாகப் பரவும். மரு நீக்கும் காட்டரைசேஷன் சிகிச்சையில் ஒவ்வொரு முறையும் புதிய ஊசியைத்தான் உபயோகிக்க வேண்டும். உபயோகித்த ஊசியைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது. ரேசரும் இப்படித்தான். ஃபேஷியல் செய்து முடித்ததும், கடைசியாக சன்ஸ்கிரீன் தடவி அனுப்ப வேண்டும். பிளீச் செய்யும்போது, உங்களது தேவை என்ன என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள். சருமத்தில் உள்ள முடியின் நிறத்தை மாற்றாமல், வெறுமனே சருமத்தை மட்டும் சுத்தப்படுத்தக்கூடிய பிளீச் இப்போது வந்து விட்டது. சரும ரோமங்களின் நிறம் மாறாமலிருக்க வேண்டுமென நினைப்போர் இதைச் செய்து கொள்ளலாம். வாக்ஸ் செய்கிற போது, முதலில் வாக்ஸ் செய்யப்பட வேண்டிய பகுதியை சுத்தப்படுத்தி, பிறகு வாக்ஸ் செய்து, கடைசியாக போஸ்ட் வாக்ஸ் ஜெல்லோ, கிரீமோ அல்லது மாயிச்சரைசரோ உபயோகிக்கிறார்களா எனப்பாருங்கள். ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங்கின் போது… 20 வயதுக்கு முன்னால் ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் போன்ற கெமிக்கல் சிகிச்சைகளைச் செய்து கொள்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. அதன் பிறகு செய்கிறவர்களும், அடிக்கடி செய்வதைத் தவிர்க்க வேண்டும். புதிதாக வளர்கிற முடி, பழையபடிதான் வளரும். அதை மறுபடி டச்சப் செய்ய நினைத்து, அடிக்கடி இந்த மாதிரி கெமிக்கல் சிகிச்சைகளை செய்வது நல்லதல்ல. ஸ்ட்ரெயிட்டனிங் செய்தே ஆக வேண்டும் என விரும்புவோர், கெரட்டின் கலந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இதில் அமோனி யாவோ, கடுமையான கெமிக்கல்களோ கிடையாது என்பதால் கூந்தலுக்குப் பாதுகாப்பானது. சாதாரண ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சையை விட சில நூறு ரூபாய் அதிகமானது என்றாலும் பாதிப்பில்லாதது. பெர்மிங் செய்து கொள்ள விரும்புவோருக்கும், அதே போல பாதுகாப்பான, பக்கவிளைவுகள் தராத சிகிச்சைகள் உள்ளன. அழகுக்கலை நிபுணரிடம் பேசித் தெரிந்து கொண்டு அவற்றைச் செய்து கொள்ளலாம். முக்கியமாக இந்த சிகிச்சைகளில் கவனிக்க வேண்டிய விஷயம், சிகிச்சைக்குப் பிறகான பராமரிப்பு. அந்தந்த சிகிச்சைக்கேற்ற ஷாம்பு, கண்டிஷனர் உபயோகித்தால்தான் பக்க விளைவுகள் இல்லாமல் கூந்தலைப் பராமரிக்க முடியும். அதையும் அழகுக்கலை நிபுணரிடம் கேட்டுப் பின்பற்ற வேண்டும்.

Thanks n Regards
Jeevanandam K

பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க…


 

பாட்டி சொல்லும் அழகு குறிப்புகள் வேஸ்ட்ன்னு நினைக்குறவங்களா? முதல்ல இத படிச்சு பாருங்க…

உங்கள் பாட்டி தனது பழம்பெருமை குறித்து சொன்னால் சற்று நேரம் காது கொடுத்துக் கேளுங்கள். ஏனெனில் அவர் சொல்வது அனைத்தும் உண்மை. அழகிய சருமம், கூந்தல், நகங்களை பராமரிக்க செலவு அதிகமாகும். அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஆயினும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட அழகுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். இவை முழுவதும் முழுக்க முழுக்க இயற்கையான மூலிகைகளால் ஆனவை. பளபளக்கும் கூந்தல், ஆரோக்கியமான ஸ்கால்ப், பொலிவற்ற சருமம் ஆகியவற்றைப் பெற சில பன்னாட்டு அழகுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். கண்களில் கருவளையத்தை நீக்க வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்துப் பார்த்திருப்பீர்கள். கருவளையத்தை நீக்க எண்ணற்ற க்ரீம்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. கருவளையங்கள் நீங்குவது கனவு தான் எனக் கருதுகிறீர்களா? அல்லது அவற்றை முயற்சி செய்து பார்க்கத்

 

துணிவில்லையா? அப்படியானால், ஸ்பானிஷ் பெண்களைப் பின்பற்றுங்கள். மெல்லியதாக சீவிய உருளைக்கிழங்கைப் பயன்படுத்துங்கள். அதிலும் அவற்றை கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வைத்திருங்கள். கண்களுக்குக்ழ் உள்ள இரத்த நாளங்களை மென்மையாக்கி, கருவளையம் குறைந்திருப்பதை உணர்வீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க முடியாத பிரச்சனை என்று ஒன்று உண்டென்றால் அது செல்லுலைட் தான். செல்லுலைட்டை நீக்க முடியாது என்று தான் பலர் நம்புவார்கள். பிரேசில் நாட்டுப் பெண்கள் தமது உடலில் மணலைக் கொண்டு தேய்த்துக் கொள்வார்கள். செல்லுலைட்டைப் பொருத்தவரையில், டிரை பிரஷ் செய்வது மிகச்சிறப்பானது. இது இயற்கையானதும் கூட. எனவே செல்லுலைட்டுக்கு குட்பை சொல்ல வேண்டுமென்றால், மணலைத் தேய்த்துக் கொள்ளுங்கள். அழகுபடுத்திக் கொள்வதற்கு ஏராளமாக செலவு செய்ய வேண்டுமென்பதில்லை. அதிக நேரம் செலவிட வேண்டுமென்பதில்லை. நமது சமையலறையிலுள்ள எளிய சமையல் பொருட்களே நம்மை நாமே, அழகுபடுத்திக் கொள்ள உதவப் போதுமானவை. கிரேக்க மற்றும் இத்தாலியப் பெண்கள், வெடிப்புற்ற உதடுகளை சரி செய்ய ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். வறண்ட மற்றும் அரிப்பூட்டும் சருமத்தைக் குணப்படுத்த இது மிகச்சிறந்த தீர்வாகும். மேலும் இது சருமத்தையும் உதடுகளையும் கண்டிஷன் செய்து பளபளக்கவும் செய்யும். முதுமையைத் தள்ளிப் போடும் தன்மை வாய்ந்த சருமம் வேண்டுமா? சீனர்கள் செய்வதைப் போல வெள்ளைத் தேநீர் பருகுங்கள். பொடோக்ஸ், ஃபில்லர் மற்றும் கொலாஜன் போன்ற ஃப்ரீ ரேடிக்கல்களைப் பற்றிய கவலையே பட வேண்டாம். பொடுகினால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவுடன், யூகலிப்டஸ் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய்யை சில சொட்டுக்கள் கலந்து பயன்படுத்துங்கள். பிறகு பொடுகுக்கு குட்பை தான். இருந்தாலும் நறுமணமிக்க ஆயிலைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். வேண்டுமானால் ஸ்கால்ப்பில் சில சொட்டுக்கள் விட்டு மசாஜ் செய்யுங்கள். ஸ்காண்டிநேவியன் பெண்கள் மாசு மருவில்லாத பளபளப்பான சருமத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அவர்கள் ஏராளமான ஊற்று நீரைப் பருகுவார்கள். அவ்வப்போது முகத்தினையும் நீரால் கழுவிக் கொள்வார்கள். சருமப் பராமரிப்புக்கு நீர் ஒரு முக்கியமான காரணியாகும். குளிக்கும் போது நீராவியால் முகத்தினை சுத்தப்படுத்துவது, முகத்திலுள்ள அடைபட்ட சருமத் துவாரங்களை திறக்க உதவும். அத்துடன் துவாரங்களில் இருக்கும் மாசுக்களையும் நீக்கும். ஆகவே முகத்தில் நீராவிப் படுமாறு செய்து பின் குளிர்ந்த நீரால் அடிக்கவும். அதிலும் குளிர்ந்த நீரால் இருபது முறை அடிப்பது நல்ல பலனைத் தரும். டொமினிகன் ரிபப்ளிக்கில் உள்ள பெண்கள் தமது நகங்களை வலுவூட்ட பின்பற்றும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? பூண்டு! ஆம். பூண்டு தான் நகங்களை வலிமைப்படுத்தும் இயற்கைப் பொருளாகும். அழகிய ஆரோக்கியமான வலிமையான நகங்கள் வேண்டுமா? பூண்டினை உரித்து நசுக்கி நீங்கள் பயன்படுத்தும் நெயில் பாலிஷ் பாட்டிலில் போட்டு விடுங்கள். ஏழு அல்லது எட்டு நாட்கள் அப்படியே இருக்கட்டும். எட்டு நாட்களுக்குப் பிறகு இந்த நெயில் பாலிஷினை உங்கள் நகத்தில் பூசிக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் ஒரு மாதிரி வாசனை வந்தாலும், உடையாத நகத்தினை குறைந்த செலவில் பெறும் சிறப்பான முறை இது.

Thanks n Regards

Jeevanandam K